** மரங்களுக்கு தேவையான உரத்தை மரங்களே பெற்றுக் கொள்ளுமாறு செய்துகொள்ளலாம். உதாரணமாக இரண்டு தென்னை அல்லது பழ மரங்களுக்கு நடுவே 4 அடி நீளம், 2 அடி அகலம், 2 அடி ஆழம் கொண்டதாக குழி எடுக்கவேண்டும் இரு மரங்களுக்கு நடுவே இருக்கும் இடைவெளியைப் பொறுத்து குழியின் நீளத்தைக் கூட்டிக்கொள்ளலாம்.
** குழிகளில் தேவையற்ற வாழை (இலை,தண்டு) மரங்களைத் துண்டு துண்டாக வெட்டிப் போட வேண்டும். அதன் மீது எதன் இலை, தழை கிடைத்தாலும் போடலாம். வேப்ப இலையைச் சேர்த்துப் போட்டால் பூச்சித் தாக்குதல் இருக்காது.
** இப்படி இலை, சருகுகள், காய்கறி,பழ கழிவுகள், கால்நடைக் கழிவுகள், மழைநீர் என அடுத்தடுத்து சேர்ந்து குழி முழுமையாக நிரம்பியதும், தென்னை மட்டைகளை படுக்கை வரிசையில் அடுக்கவேண்டும்.
** உரக்குழியில் உள்ள சத்து நீர் ஆவியாகாமல் இருக்கத்தான் இந்த ஏற்பாடு. குழியில் உள்ள இயற்கைப் பொருட்கள், மண்ணோடு மண்ணாக அமுங்க ஆரம்பித்ததும், மட்டை அடுக்கின் மீது மண் போட்டு, அதையும் அமுக்கவேண்டும்.
** மரங்கள், செடி, கொடிகள் தங்களுக்குத் தேவையான சத்துக்களை இந்த உரக்குழிகளில் இருந்தே எடுத்துக் கொள்ளும் மூன்றாண்டுகளுக்குத் தேவையான இயற்கை உரம் இதிலிருந்து கிடைத்து விடும். சில மாதங்கள் கழித்து கிளறிப் பார்த்தால் மண்புழுக்கள் நிறைந்திருக்கும்.
** தொட்டி செடிகளுக்கு தேவையான உரத்தையும் இங்கிருந்தே எடுத்துக்கொள்ளலாம்.