நெல்வயலில் மீன் வளர்ப்பு இரு முறைகளில் செய்யப்படுகிறது.
1.. சம காலத்தில் (ஒரே காலத்தில்) இரண்டையும் வளர்த்தல்
2.. சுழற்சி முறை வளர்ப்பு
** சமகால வளர்ப்பு முறை
இதற்கு 0.1 ஹெக்டர் பரப்பளவு நிலமே போதுமானது. இதை நான்கு 250மீ2 (25 x 10 மீ) உள்ள பகுதிகளாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பகுதியும் 0.75 மீ அகலமும், 0.5 மீ ஆழமும் கொண்ட குழி (அகழி) தோண்ட வேண்டும்.
இந்த அகழி வைக்கோல் பதியவைக்கப்பட்டு வலுப்படுத்தப்பட வேண்டும். 0.3மீ அகலம் கொண்ட நெல் வயலைச் சூழ்ந்திருக்க வேண்டும். இந்த அகழி இருபுறமும் சிறு வாய்க்காலால் இணைக்கப்பட வேண்டும். சல்லடை அடைப்புடன் கூடிய சிறிய மூங்கில் தண்டினை (து) வாய்க்கால் அகழியுடன் சந்திக்குமிடத்தில் வைக்க வேண்டும். இதனால் மீன்கள் வெளியேறாமலும், சிறு மீன்களை விழுங்கும் பெரிய மீன்கள் உட்புகாமலும் பாதுகாக்க இயலும்.
இந்த அகழிகள் நெற்பயிர் இல்லாத சமயத்தில் மீன்களுக்குப் பாதுகாப்பாக இருப்பதோடு தண்ணீர் குறையும் சமயத்தில் சேகரித்து வைக்கவும் உதவும். வளர்க்கும் மீன் வகையின் அளவு மற்றும் பயிரிடும் நெல் இரகத்தைப் பொறுத்து பராமரிக்கும் தண்ணீரின் அளவு மாறுபடும்.
இவ்வாறு நெல் வயலில் வளர்க்கப்படும் மீனானது குறைந்த ஆழத்தில் மேலேயே வளரக் கூடியதாகவும், 350 செல்சியஸ் வரை வெப்பநிலையைத் தாங்கக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். அதோடு குறைந்த ஆக்ஸிஜனும் அதிக கலங்கல் தன்மை உள்ள நீரில் வளரும் தன்மையுடையதாக இருத்தல் வேண்டும். கட்லா, ரோகி, மிர்கல், கார்ப்போ, முகில், சானோஸ், மொசாம்பிக்ஸ் போன்ற
** சுழற்சிமுறை வளர்ப்பு
இம்முறையில் மீன் மற்றும் நெல் அடுத்தடுத்து பயிர் செய்யப்படுகிறது. நெற்பயிரை அறுவடை செய்தபின் அவ்வயல் மீன் வளர்க்கும் குளமாக மாற்றப்படுகிறது. இம்முறையில் முக்கிய பயன் களைக்கொல்லி மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துதல் இயலும். அதோடு மீன்களுக்கு தேவையான அளவு 60 செ.மீ வரை நீரின் ஆழத்தைப் பராமரிக்க இயலும்.
நெற்பயிர் அறுவடை முடிந்த ஓரிரு வாரங்களில் வயலை மீன் வளர்ப்புக்குத் தயார் செய்ய வேண்டும். கெண்டை இன மீன் வகைகள் இம்முறைக்கு மிகவும் ஏற்றவை. 2 -3 செ.மீ அளவுள்ள நுன்குஞ்சுகளாக இருப்பின் ஹெக்டருக்கு 20000 குஞ்சுகளும், விரலளவு குஞ்சுகளாக இருப்பின் ஹெக்டருக்கு 6000 குஞ்சுகளும் குளத்தில் விட வேண்டும்.
10 வாரங்களுக்குப் பிறகு நுண்மீன் குஞ்சுகளையும், விரலளவு குஞ்சுகளை 6 வாரங்களுக்குப் பிறகும் அறுவடை செய்யலாம். ஒரு மீனின் வளர்ச்சி சுழற்சி முறையில் 100 கிராம் வரையிலும் உற்பத்தி அளவு ஹெக்டருக்கு 2000 கி.கிமும் கிடைக்கும். நல்ல விலை கிடைத்தால் மீன் வளர்ப்பில் நெற்பயிரில் கிடைக்கும் இலாபத்தை விட அதிக லாபம் கிடைக்கும்.