வேளாண்மையுடன் மீன் வளர்ப்பு முறையை எப்படி மேற்கொள்ளணும்?

 
Published : Mar 17, 2018, 01:17 PM ISTUpdated : Sep 19, 2018, 02:05 AM IST
வேளாண்மையுடன் மீன் வளர்ப்பு முறையை எப்படி மேற்கொள்ளணும்?

சுருக்கம்

How to do fish farming with agriculture?

வேளாண்மையுடன் மீன் வளர்ப்பு முறை 

நெல், வாழை, தென்னை போன்ற வேளாண்  பயிர்களுடன் சேர்த்து மீன் வளர்ப்பது இரட்டிப்பு பலன் தரும்.

நெல் வயலில் மீன் வளர்ப்பு

இந்தியாவில் 6 மில்லியன் ஹெக்டர் பரப்பளவில் நெற்பயிர் பயிர் செய்யப்பட்டாலும், 0.03% மட்டுமே நெல் - மீன் வளர்ப்பு செய்யப்படுகிறது. இம்முறையில் பல நன்மைகள் காணப்படுகின்றன. 

அவை

** குறைந்தளவு நிலத்திலும் அதிக பொருளாதாரப் பயன்பாடு.

** அதிக ஆட்கூலி தேவைப்படுவதில்லை.

** களையெடுப்பு மற்றும் மீன்களுக்கு உணவளித்தல் போன்ற செயல்களுக்கான ஆட்கூலி தேவை மிச்சமாகும்.

** அதிக நெல் விளைச்சல்.

** விவசாயிக்கு வயலிலிருந்து நெல், மீன் மற்றும் வயல்வெளி ஓரங்களில் வெங்காயம், பீன்ஸ், போன்றவற்றின் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கிறது. எனவே நமது நாட்டில் நெல்வயலில் மீன் வளர்க்கும் முறையை அதிகப்படுத்துதல் வேண்டும்

** நெல் வயலில் 3 - 8 மாதங்கள் வரை நீர் தேங்கி இருக்கும். நெற்பயிர் அறுவடை முடிந்தபின் மீதமிருக்கும் நீரில் உள்ள மீன்கள் பயிரில்லாத காலத்தில் விவசாயிக்குக் கூடுதல் இலாபம் அளிக்கும். இதற்கு வயலில் சில அமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

** வட்டவடிவ குழிகள் தோண்டி கரைகள் கட்ட வேண்டும். குளம் போன்று உருவாக்கியபின் அதில் ஹெக்டருக்கு 10000 வரை மீன்குஞ்சுகளை விட வேண்டும். அவற்றிற்கு உணவாக அரிசி - உமி புண்ணாக்குகள் 2 - 3% உடல் எடைக்கு ஏற்றவாறு அளிக்கலாம்.

** இவ்வாறு மீன் வளர்ப்பிற்கு ஏற்றவாறு பனிதன், துளசி, சி.ஆர் 260 77, ஏ.டி.ட்டி - 6,7, ராஜராஜன் மற்றும் பட்டம்பி 15,16 போன்ற நெல் இரகங்களைத் தேர்வு செய்ய வேண்டும். இந்த இரகங்கள் நீர்த்தேக்கத்திலும் நன்கு வளரக் கூடியவை. 

** அதோடு இதன் வாழ்நாள் 180 நாள் வரை இருப்பதால் மீன்வளர்ப்பை நாற்று நட்டபின் ஆரம்பிக்கச் சரியான தருணமாகும். மீன்கள் விற்பனைக்கு உகந்த  அளவு எடைக்கு வந்த பின்பு அறுவடை செய்து விற்றுவிடலாம்.


 

PREV
click me!

Recommended Stories

Agri Export: வாழை விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! இனி நீங்களும் ஏற்றுமதியாளர் ஆகலாம்.! வழிகாட்டுகிறது தமிழக அரசு.!
Business: இப்படியொரு வாய்ப்பா...? இனி விவசாயமும் ஸ்டார்ட்அப் தான்! ரூ.25 லட்சம் வரை அரசு சப்போர்ட்!