ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு - அறிமுகம் முதல் வகைகள் வரை ஒரு அலசல்...

 |  First Published Mar 17, 2018, 1:15 PM IST
Integrated Fish Rejuvenation - Introduction



ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு முறை

மீன் வளர்ப்பு பயிர் விளைச்சல் மற்றும் கால்நடை வளர்ப்புடன் சேர்த்து செய்யப்படுகிறது. இவ்வாறு ஒருங்கிணைத்துச் செய்யும்போது வளங்கள் நன்கு பயன்படுத்தப்படுவதோடு, இருக்கும் குறைந்த அளவு நிலத்தில் அதிக அளவு உற்பத்தி செய்ய முடியும். 

Tap to resize

Latest Videos

தற்போது அதிகரித்து வரும் மீன் பொருட்களின் விலையினாலும், பயிர்களுக்கு இடும் உரம் அதிக விலையாக இருப்பதாலும் நெல் போன்ற பயிர்களின் வயலில் மீன் வளர்ப்பது பற்றிவிழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. 

இதன்மூலம் மக்களுக்குக் குறைந்த செலவில் நல்ல மீன் புரதங்கள் எளிதில் கிடைக்கின்றது. அதோடு வயலிற்கு எருவாக மீன்களின் கழிவுகள் பயன்படுகின்றன.

பண்ணை (வயலின்) குளங்களில் மீன் வளர்க்கலாம். அதேபோல் கரை ஓரங்களில் வாத்துக்களை மேய விடலாம். வயல் ஓரங்களில் காய்கறி மற்றும் பழ மரங்களை விதைக்கலாம். இதனால் நமக்கு முட்டை, இறைச்சி, உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் மீன் போன்றவை கிடைக்கும். இதனால் நல்ல சரிவிகித உணவு கிடைப்பதோடு பொருளாதார அளவிலும் அதிக இலாபம் ஈட்ட முடிகிறது.

குளங்களில் வாத்து வளர்த்தல், பயிர்கழிவுகளை கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுத்துதல், மேலும் கால்நடை கழிவுகளை பயிர்களுக்கு உரமாக்குதல் போன்ற சுழற்சி முறைப் பயன்பாடே ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பாகும். இது சிறந்த வேலைவாய்ப்பை அளிப்பதுடன், கிராமப்புற வளர்ச்சிக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கும்.

ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பில் இரண்டு முறைகள் உள்ளன. 

1) வேளாண் பயிர் செய்தல் - மீன் வளர்ப்பு, 

2) மீன் வளர்ப்பும் கால்நடைப் பராமரித்தலும்.

வேளாண் பயிர் சாகுபடி  மீன் வளர்ப்பில் நெல் - மீன் வளர்ப்பு, தோட்டக்கலை - மீன் வளர்ப்பு, காளான் - மீன் வளர்ப்பு, பட்டுப்புழு - மீன் வளர்ப்பு போன்ற முறைகள் அடங்கும்.

இதேபோல் கால்நடை - மீன் வளர்ப்பில், மாடுகளுடன் - மீன் வளர்ப்பு, பன்றியுடன்  மீன் வளர்ப்பு, கோழி - மீன் வளர்ப்பு, வாத்து - மீன் வளர்ப்பு, ஆடு - மீன் வளர்ப்பு, முயல் - மீன் வளர்ப்பு.

click me!