நெல்லில் விதை நேர்த்தி:
அசோஸ்பைரில்லத்துடன் விதை நேர்த்தி: மூன்று பொட்டலங்கள் அசோஸ்பைரில்லம் 1600 கிராம் / ஹெக் மற்றும் 3 பொட்டலங்கள் பாஸ்போபாக்டீரியா அல்லது 6 பொட்டலங்கள் அசோபாஸ் (1200 கிராம் / ஹெக்). உயிர் உரங்களை தேவையான தண்ணீரில் கரைத்து விதைகளை விதைப்பதற்கு முன் இரவு முழுவதும் முக்கி வைக்க வேண்டும். (மீதமுள்ள கரைசலை நாற்றங்கால் பகுதியில் தெளித்து விடலாம்)
உயிர் கட்டுப்பாடு காரணிகள் உயிர் உரங்களுடன் ஒத்துப் போகும்
உயிர் உரங்கள் உயிர் கட்டுப்பாடு காரணிகளை விதை மூழ்குவதற்காக ஒன்றாக கலக்கலாம்
பூஞ்சான் கொல்லிகள் மற்றும் உயிர் கட்டு்ப்பாடு காரணிகள் ஒன்றுக்கொன்று ஒத்துப் போகாது
ஊட்டச்சத்து மேலாண்மை:
ஒரு டன் மட்கிய பண்ணை உரம் அல்லது மட்கிய உரம் 20 செண்ட் நாற்றங்காலில் இடவேண்டும் மற்றும் ஒரே மாதிரியாக மண்ணில் பரப்ப வேண்டும். 20 – 25 நாள்கள் கழித்து விதைப்பிற்கு பின் நாற்றுகளை பிடுங்கும் போது, அடி உரமாக டி. ஏ. பி அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.