விதை நேர்த்தி ஏன் செய்யணும்? அப்படி செய்வதால் கிடைக்கும் பலன்கள்…

First Published Aug 23, 2017, 12:02 PM IST
Highlights
Why do seed treatment Benefits of doing so ...


விதைக்கும் முறைகள்

விதை மூலமாகப் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த விதை நேர்த்தி செய்து விவசாயிகள் விதைக்க வேண்டும்.ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் மருந்தை கொண்டு விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருள்கள், தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெற தங்கள் பகுதி வேளாண்துறை களப்பணியாளர்களை அணுகி பயன்பெறலாம்.

விதை நேர்த்திக்கான செயல்முறை

விதை நேர்த்தி என்ற சொல்லானது இடுபொருள் மற்றும் செய்முறைகளை குறிக்கும் ஒரு பதமாகும். கீழ்கண்ட முறைகளில் ஏதாவது ஒரு முறையில் விதை நேர்த்தியானது செய்யப்படலாம்.

விதை மேல் பூசுதல்

இது பொதுவாக செய்யப்படும் ஒரு விதை நேர்த்தி முறையாகும். இந்த முறையில் விதையானது, உலர்ந்த வகை பொருட்களைக் கொண்டோ அல்லது கஞ்சி போன்ற பொருளில் நனைத்தோ அல்லது திரவப் பொருட்களைக் கொண்டோ முலாம் பூசப்படுகின்றது.

இந்த விதை நேர்த்தி முறை பண்ணையிலும் தொழிற்சாலைகளிலும் செயல்ப்படுகிறது. பொதுவாக விதையுடன் பூச்சிக் கொல்லி மருந்துகளைக் கலப்பதற்கு மண் பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றது. இதை தவிர விதைகளை பாலிதீன் பைகளின் மீது பரப்பி, அதன் மீது தேவையான அளவு மருந்தினை தெளித்தும் விவசாயிகள் விதை நேர்த்தி செய்யலாம்.

விதை மேலுறையிடுதல்

இம்முறையில் ஒரு சிறந்த ஒட்டும் பொருளைக் கொண்டு, நேர்த்தி செய்ய வேண்டிய விதையின் மேல் ஒட்டப்படுகிறது. தொழிற்சாலைகளில் விதை மேலுறையிடுவதற்கு, உயர்ந்த விதை நேர்த்தி தொழில்நுட்பமானது தேவைப்படுகிறது.

விதை முலாம்

இம்முறையானது விதைநேர்த்தி முறைகளில் மிகச் சிறந்த உயரிய முறையாகும். இதன் மூலம் விதையின் அமைப்பில் மாற்றம் செய்யப்பட்டு, விதை முலாம்பூசப்பட்டு, அதைக் கையாளுவது எளிதாக்கப்படுகின்றது. இத்தகைய விதை நேர்த்தி முறைக்கு தனித்துவம் வாய்ந்த இயந்திரங்கள், செயல்முறை மற்றும் தொழில்நுட்பங்கள் தேவைப்படுகின்றன. இது மிகவும் அதிக செலவாகக் கூடிய ஒரு செயல்முறையாகும்.

விதை நேர்த்தி செய்வதால் ஏற்படும் பலன்கள்

விதை மற்றும் மண் மூலம் பரவும் நோய்க்கிருமிகள் மற்றும் பூச்சிகளிலிருந்து முளைக்கும் விதை மற்றும் விதை நாற்றுகள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கிறது.விதை முளைப்புத் தன்மையை அதிகப்படுத்துகின்றது.

குறித்த காலத்திற்கு முன், சீரான நிலை மற்றும் வேக வளர்ச்சியை அடைய உதவுகிறது.பயிறு வகைகளில், வேர் முடிச்சுகள் உருவாகுவதை அதிகப்படுத்துகின்றது.

சத்துக்களை மண் மற்றும் இலை வழிகளில் செலுத்துவதைவிட, இம்முறை சிறந்தது.குறைந்த/ அதிக ஈரத்தன்மை போன்ற எதிர்மறையான சுழ்நிலைகளிலும் சீரான பயிர் வளர்ச்சியை தருகிறது.

click me!