புழு, பூச்சி, வண்டு, பெருச்சாளிகள் போன்றவை கிடங்குகளில் சேமித்து வைக்கப்படும் உணவு தானியங்களில் பெருமாளவு தாக்கி சேதப்படுத்தும். இதனால் கடும் துர்நாற்றமும் ஏற்படும்.
வீரியமான பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தாலும் இவைகளை கட்டுப்படுத்துவது கடினம் தான்.
undefined
இவற்றை பாதுகாக்க தான் மண் பூச்சு முறை பயன்படுகிறது.
‘மண் பூச்சு’
‘மண் பூச்சு’ தொழில்நுட்பம் உணவு தானியங்கள் புழு, பூச்சி, வண்டு, பெருச்சாளிகளின் தாக்குதல் இன்றியும், பல ஆண்டுகள் வரை கெட்டுப் போகாமல் பாதுகாக்கும் மண் பூச்சு தொழில்நுட்ப முறையை பாரம்பரியமாக கையாண்டு வருகின்றனர்.
மண் பூச்சு முறையில் பாதுகாக்கப்படும் தானியங்களை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு பின் பயன்படுத்தும்போது கூட நுண்ணுாட்ட சத்துக்கள் அபரிமிதமாக இருக்கும்.
மண் பூச்சு செய்த பிறகு தானியங்களை மாதம் ஒரு முறை வெயிலில் காய வைக்க வேண்டும்.
இப்படி செய்யும்போது நான்கு ஆண்டுகள் வரை பருப்பு கெடாது. புழு, பூச்சி, வண்டு, பெருச்சாளி அண்டாது.
செம்மண்ணை தானியத்தை கலந்து தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதனை மூட்டைகளில் போட்டு சேமிப்பு கிடங்குகளில் வைத்து பாதுகாக்கலாம்.
மண் பூச்சு முறை அனைத்து தானியங்களுக்கும் பொருந்தும்.