துத்தநாகம்
** மாவுச்சத்து உருமாற்றத்திற்கு முக்கியமானது.
** சர்க்கரை உட்கொள்ளும் திறனை கட்டுப்படுத்துகிறது.
** நெற்பயிரில் துத்தநாகத்தின் செயலானது, நொதிப் பொருளின் உலோக செயல் ஊக்கியாக விளங்குகிறது.
** தாழ்வான நில நெற்பயிரில் துத்தநாகத்தின் பற்றாக்குறை பொதுவாக களர்மண் குறிப்பாக சுண்ணாம்புச்சத்து நிறைந்த மண்ணில் காணப்படுகிறது.
** நீர் மூழ்கிய மண்ணை விட மேட்டுபாங்கான மண்ணில், மண் மற்றும் இடப்பட்ட துத்தநாகத்தின் அளவு அதிகமாய் காணப்படுகிறது.
** மண் அமிழ்வு ஏற்படுத்தினால், மண் கரைசலில் துத்தநாகத்தின் செறிவு குறைகிறது.
** ஒரு டன் நெல்லுக்கு, 30-40 கிராம் துத்தநாகத்தை நெற்பயிர் அகற்றுகிறது.
போரான்

மெக்னீசியம்
** பச்சையத்தின் முக்கிய ஆக்கக் கூறாக விளங்குகிறது மெக்னீசியம்.
** பொதுவாக குறைந்த அளவு மெக்னீசியமே பயிர்களுக்குத் தேவைப்படுகின்றன. அதனால் சாம்பல்சத்து பற்றாக்குறைக்கு அடுத்தே, மெக்னீசியத்தின் பற்றாக்குறை காணப்படுகிறது.
கந்தகச்சத்து
** பச்சையம் உற்பத்தி, புரதச்சேர்க்கை மற்றும் பயிர் வடிவம் மற்றும் அதன் செயல்பாட்டிற்கு கந்தகச்சத்து முக்கிய பங்களிக்கிறது.
** வைக்கோல் மற்றும் செடித்தண்டுகளின் முக்கிய ஆக்கக்கூறாக கந்தகம் விளங்குகின்றது.
இரும்புச்சத்து
** பச்சையம் சேர்க்கைக்கு இரும்புச்சத்து தேவைப்படுகிறது.
** மேட்டுப்பாங்கான நில மண்ணில் முக்கிய பிரச்சினையாக உள்ளது.
தாமிரசத்து
** “பிளாஸ்டோசையனின்” (தாமிரச்சத்து கொண்ட புரதம்) என்பதின் முக்கியக்கூறு தாமிரம்.
** சில உயிர்வழி நொதிப் பொருள்களின் முக்கியக் கூறாகும்.
** இனப்பெருக்க வளர்ச்சிக்கு முக்கியமானது.
** வேர் வளர்ச்சிப் பொருள் ஆக்கம் மற்றும் புரதச்சத்து பயன்பாட்டிற்கும் உதவுகிறது.
மாங்கனீசு
** மாங்கனீசு, நைட்ரேட் குறுக்கம் மற்றும் நிறைய சுவாச நொதிகளின் செயற் ஊக்கியாகும்.
** ஒளிச்சேர்க்கையின் போது உயிரியம் பரிமாற்றத்திற்கு மாங்கனீசு தேவைப்படுகிறது.
** மாவுப் பொருள் மற்றும் தழைச்சத்து ஆக்கநிலைகுழைவில் பங்களிக்கும் நொதிப் பொருள் அமைப்புகளுடன் செயலாற்றுகிறது.
** மண் இயற்கையாய் பெற்றிருக்கும் மாங்கனீசு சத்து போதுமானதாக இருக்கும்.
சிலிக்கான்
** நெற்பயிர் வளர்ச்சிக்கு உதவுகிறது.
** பயிர் வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்புத்திறனுக்கு முக்கிய தனிமமாக சிலிக்கான் விளங்குகிறது.
** உயிரற்ற மற்றும் உயிரிலுள்ள நோய்களின் தாக்குதலுக்கு சில பயிர்கள் இலக்காகும் தன்மையை சற்றே குறைக்கும் ஆற்றல் பெற்றது.
** சிலிக்கான் அளிப்பதால், பயிரின் வலிமை மற்றும் விறைப்புத் தன்மையை அதிகரிக்கவும் உதவுகிறது. இதனால் சிறந்த நெற்பயிர் மகசூல் கிடைக்கிறது.
** பயிர் வேர்கள் சிலிக்கான் சத்தை, சிலிக்கான் அமிலமாக எடுத்துக் கொள்கிறது.
** நீரில் உள்ள சிலிக்கான் அமிலத்தை வேர்கள் உறிஞ்சிக் கொள்ளும் அளவும் சிலிக்கான் சத்தை நெற்பயிர் எடுத்துக் கொள்ளும் அளவும் சமமனாது. அதிக அளவு நீராவிப் போக்கு இருந்தால், சிலிக்கான் சத்தை எடுத்துக்கொள்ளும் அளவும் அதிகமாகும்.