மா மரங்களில் அதிக விளைச்சலை பெற மேற்கொள்ள வேண்டிய பயிர்ப் பாதுகாப்பு முறைகள் இதோ...
** தத்துப்பூச்சியை கட்டுப்படுத்த ஹெக்டேருக்கு பாசலோன் 35 இசி 1.5 மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து கிளைகள், தண்டுகள், மரத்தின் இலைகள், ஆகியவைகளில் நன்கு படும்படி தெளிக்க வேண்டும்.
** அதேபோல், கார்பரில் 50 சதவீதம் நனையும் கந்தகம் ஆகியவற்றை ஒரு லிட்டர் நீரில் கலந்து பூப்பிடிக்கும் காலத்தில் தெளிக்க வேண்டும்.
** பூப்பிடிக்கும் பருவம் என்பதால் பூங்கொத்து புழு அதிகம் தாக்கும். இதை கட்டுப்படுத்த பாசலோன் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
** தண்டு துளைப்பான் நோய் தாக்குதல் இருந்தால் தரை மட்டத்திலிருந்து சுமார் 1 மீட்டர் உயரத்தில் மரத்தின் பட்டையை ப வடிவில் செதுக்கி இடையில் நனையும் பஞ்சை வைத்து மானோகுரோட்டாபாஸ் 10 மில்லி மருந்தை பஞ்சு நனையும் வரையில் வைத்து பின்பு பட்டையை மரத்தோடு பொறுத்தி களிமண் பசையினால் மூட வேண்டும்.
** இலைப்புள்ளி தாக்குதல் இருந்தால் மாங்கோசெப் 2 கிராம் மருந்து ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது கார்பென்டாசிம் 1 கிராமை ஒரு லிட்டர் தண்ணீரிலும் அல்லது க்ளோராதலேனில் 2 கிராம் ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து பிஞ்சுப் பருவத்திலிருந்து அறுவடை செய்வதற்கு முன்பு வரையில் 15 நாள்களுக்கு ஒரு முறை தெளித்து வர வேண்டும்.
இதுபோன்ற பயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்றி மாம்பழ மகசூலை அதிகரிக்க செய்யலாம்.