
நெற்பயிருக்கு ஊட்டச்சத்து தரும் மணிச்சத்து
** மணிச்சத்து, குறிப்பாக முன் வளர்ச்சிப் பருவத்தில் முக்கியமாகத் தேவைப்படுகின்றது.
** மணிச்சத்து நெற்பயிருக்குள்ளேயே இயங்கும் தன்மை கொண்டு, வேர் வளர்ச்சியைத் துாண்டுகின்றது. மேலும் துார்கள் வைப்பது மற்றும் முன்னரே பூத்தல் ஆகியவற்றை மேம்படுத்துகின்றது.
** மண் இயற்கையாய் பெற்றிருக்கும் மணிச்சத்து போதுமானதாக இல்லையென்றாலும், நெற்பயிரின் வேர் அமைப்பு நன்கு வளர்ச்சியடையாத நிலையிலும், மணிச்சத்து கூடுதலாக தேவைப்படுகின்றது.
** பயிரின் முன் வளர்ச்சி நிலையில் போதுமான மணிச்சத்தை எடுத்துக் கொண்டால், பின் வளர்ச்சி நிலைகளில் மணிச்சத்து நெற்பயிருக்குள்ளேயே மறு இயங்கும் தன்மை பெற்று செயல்படுகிறது.
** மேலும் மணிச்சத்து நோய் எதிர்க்கும் திறனை அதிகரித்து, தானியப் பயிர்களை வலிமையாக்குகிறது. இதனால் பயிர் சாய்தல் தன்மையை குறைக்கிறது.
** மேலும் பயிருக்கு தீங்கு விளைவிக்கும் அளவு அதிகமாக தழைச்சத்து இருப்பின் அதனை மணிச்சத்து ஈடு செய்கிறது.
நெற்பயிருக்கு ஊட்டச்சத்து தரும் சாம்பல்சத்து
** நெற்பயிருக்கு போதுமான நோய் எதிர்க்கும் ஆற்றல், பூச்சித் தாக்குதலை தாங்கும் திறன், அதிக குளிர் மற்றும் இதர சாதகமற்ற நிலைகளைத் தாங்குவதற்கும் சாம்பல் சத்து போதுமான திறனை அளிக்கிறது.
** சாம்பல் சத்தானது, மாவுச்சத்து உருவாகுவதற்கும், சர்க்கரை உற்பத்தி மற்றும் இடமாற்றத்திற்கும், மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. மாவுச்சத்து நிறைந்த பயிர்களுக்கு தனி மதிப்பை வழங்குகிறது.
** நொதிப் பொருள் செயற்பாட்டில் பங்கு வகிக்கிறது.
** ஒளிச்சேர்க்கைப் பொருள் உற்பத்தியாகவும், அவைகளை வளரும் பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யவும் உதவுகிறது.
** மற்ற ஊட்டச்த்துக்களை முறையாக எடுத்துக் கொள்ளவும் உதவுகிறது.
** துார்கள் வைப்பது, பயிர்ச்செடி கிளை உருவாக்கம் மற்றும் தானியத்தின் அளவு மற்றும் எடை அதிகரிக்கவும் துணைபுரிகிறது.
** பயிர் எடுத்துக்கொண்ட சாம்பல் சத்தில் 80 சதவிகிதம் அளவு வைக்கோலில் தான் காணப்படுகின்றது. மணல் கலந்த மண்ணில் தான் சாம்பல்சத்தின் தேவை அதிகமாய் காணப்படுகிறது.