நெல் வயலில் நன்னீர் இறால் சமகால வளர்ப்பு
நெல் வயல்களில் மேக்ரோ பிராச்சியம் ரோசன் பெர்ஜி என்ற இறால் வகைகளை மித தீவிர முறையில் வளர்க்கலாம். மீன்களைப் போலன்றி இறால் வளர்ப்பிற்கு 4 மாதத்திற்கு 12 செ.மீ ஆழத்திற்கு வெளியே செல்லும் நீருக்கு மூங்கில் தண்டில் சல்லடைத் தடுப்பு அமைத்துப் பாதுகாக்க வேண்டும்.
இறால் குதித்து வெளியே எங்கும் ஓடிவிடாமல் இருக்க 0.3 மீ நீருக்கு மேலே மடை போல் தடுப்பு கட்ட வேண்டும். அருகில் ஓரிரு சிறிய குழிகள் (1 x 2 x 0.5 மீ) வெட்டி வைத்தால் பழைய நீரை வடிக்கும்போதும் இறால் அறுவடை செய்யும்போதும் இறால்கள் தப்பிக்காமல் இருக்க உதவும்.
நாத்து நட்டு வேர்பிடித்தபின் ஒரு ஹெக்டேருக்கு 2 - 3 செ.மீ அளவுடைய 1000 குஞ்சுகள் என்ற விகிதத்தில் வயலில் விட வேண்டும்.
பயன்கள்
** மீன்கள் நெற்பயிரின் உற்பத்தியை 5 - 15 சதம் அதிகரிக்கச் செய்கிறது. ஏனெனில் மீன்களின் கழிவுகள் பயிருக்கு அங்கக உரமாகப் பயன்படுகிறது
** மீன்கள் வயலில் உள்ள பச்சைப் பசும் பாசிகள் (ஆல்காக்கள்) உண்டு விடுவதால் அவை நெற்பயிருடன் ஊட்டச்சத்துக்காகப் போட்டியிடுவது தடுக்கப்படுகிறது.
** திலேப்பிக் கெண்டை அல்லது கெண்டை போன்ற மீன்கள் தேவையற்ற நீர்க் களைகளை உண்டு விடுகின்றன. இதனால் 80% நெல்லின் இழப்பு தவிர்க்கப்படுகிறது.
** முரல்ஸ், கேட்ஃபிஷ் போன்ற மீன்கள் நெற்பயிரின் தண்டுத் துளைப்பான் போன்ற பூச்சிகளை உண்டு விடுகின்றன.
** மீன்கள் மனிதர்களுக்கு மலேரியா மற்றும் பல நோய்களை ஏற்படுத்தும் கொசு போன்ற உயிரிகளை உண்டு விடுவுதால் நோய்ப்பரவல் குறைக்கப்படுகிறது.
** நெல் வயலில் வளர்ந்த மீன்களை விற்றுவிடலாம் அல்லது அடுத்த வயலில் விட்டு கூட்டு மீன் வளர்ப்பில் வளரச் செய்யலாம்.
குறைபாடுகள்
** நெற்பயிருக்கு பூச்சி நோய் மற்றும் களைக் கட்டுப்பாட்டிற்கு இரசாயன மருந்துகளைப் பயன்படுத்துவது இம்முறையில் இயலாது.
** மீனின் வளர்ச்சியை யொட்டி அதிக அளவு நீரைத் தேக்கி வைத்தல் என்பது எப்போதும் சாத்தியமாகாது.
** புல் கெண்டை போன்ற புல்திண்ணி மீன்கள் நெற்பயிரையும் உண்ண வாய்ப்புள்ளது.
** திலேப்பிக் கெண்டை அல்லது கெண்டை மீன்கள் நெற்பயிரின் வேரினைப் பிடுங்கி விடக்கூடும். எனினும் முறையான பராமரிப்பின் மூலம் இக்குறைபாடுகளைச் சரிசெய்து விட முடியும்.