ஆடுகளில் மேற்கொள்ள வேண்டிய நோய் பரமாரிப்புகள்
1.. ஆண்டுக்கு நான்கு முறை தடுப்பூசிகள் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி அளிக்க வேண்டும்.
2.. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கால் வாய் நோய்க்கான தடுப்பூசி
3.. ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் பி பி ஆர் தடுப்பூசி
4.. ஆகஸ்ட் மாதத்தில் கால் வாய் நோய் தடுப்பூசி
5.. அக்டோபர் மாதத்தில் துள்ளுமாரி தடுப்பூசி ஆகியவற்றை போட வேண்டும்.
6.. குடற்புழு மருந்துகளை பிறந்த 30-வது நாள், 2, 3, 4, 6, 9-வது மாதங்களில் போட வேண்டும்.
7.. வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு மூலம் நோய் தாக்கும் வாய்ப்பு குறைவு.
8.. ஆடுகளுக்கு தகுந்த குடற்புழு மருந்தைத் தேர்வு செய்ய வேண்டும். தூள் மருந்தைப் பயன்படுத்தும் பொழுது வெதுவெதுப்பான நீரில் கலந்து, சிறிது கரையாத மருந்துத் துகள்களும் இருக்குமாறு கொடுக்க வேண்டும்.
9.. அதிகாலையில், வெறும் வயிற்றுடன் உள்ள ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.
10.. மருந்துக் கலவையை வாயின் வழியாக ஊற்றும் பொழுது புரையேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
11.. குடிநீரில் குடற்புழுநீக்க மருந்தும் நோய் எதிர்ப்பு மருந்தும் ஒன்றாக கலந்துக் கொடுக்கக் கூடாது.
12.. குடற்புழுக்களின் வகைகளையும் முட்டைகளையும் அறிந்து மருந்து கொடுப்பது சிறந்தது. தொடர்ந்து ஒரே மருந்தைக் கொடுக்காமல் மாற்றித் தருவது அவசியம்.