வெள்ளாடு வளர்ப்பில் இறங்குமுன் அதன் குணநலன்கள், பழக்க வழக்கங்களை தெரிஞ்சுக்கிட்டு இறங்குகள்…q

 |  First Published Aug 21, 2017, 12:17 PM IST
Before the goat is breeding you will find its characteristic and habits



1.. வெள்ளாடுகளுக்கு, அசைகின்ற வலுவான மேலுதடும், திறனுள்ள நாக்கும் உள்ளதால், முட்செடி, சுள்ளி, மரங்களின் பட்டைகள் ஆகியவற்றைக் கடித்துத் தின்ன முடியும்.

2. வெள்ளாடுகள் செடி, கொடிகளைக் கொய்து தின்னும் குணமுடையன. இவை செம்மறி ஆடுகளைப் போன்று குனிற்து புற்களை மேயுத் தன்மையுடையதல்ல.

Tap to resize

Latest Videos

3. செம்மறி ஆடுகளைப் போல், வெள்ளாடுகள் சேர்த்து மேயா. தனித்தனியாகப் பிரித்து சென்று மேயும். அருகிலுள்ள தன்னைச் சேர்ந்த வெள்ளாடுகளைக் கண்ணால் பார்க்காமல், மூக்கால் மோந்து கண்டு கொள்ளும்.

4. செம்மறி ஆடுகளைப் போன்று, வெள்ளாடுகளை ஓட்டிச் செல்ல முடியாது. மாறாக அவற்றை நடத்திச் செல்ல வேண்டும்.

5. வெள்ளாடுகள், நெருக்கடியால் சங்கடப்படுவது போலத் தனிமைப் படுத்தினாலும் பாதிக்கபடும். தனியாக ஓர் ஆட்டை வளர்ப்பது சிறந்ததன்று.

6. வெள்ளாடுகளுக்கு மிக மெல்லிய தோல் உள்ளதாலும், தோலுக்கு அடியில் கொழுப்பு இல்லாததாலும், குளிர், மழையை அதிகம் அவை தாங்கா. மழை பெய்ய ஆரம்பித்தால், வெள்ளாடு ஓடி ஒதுக்குப் புறத்தைத் தேடுவதைக் காணலாம். மேலும் வெள்ளாடுகள் வெப்ப நாடுகளில் நன்கு செழித்து வளரும்.

7. செம்மறி ஆடுகளுக்கு அதன் கூட்டமே அதற்குப் பாதுகாப்பு எதிரியைக் கண்டால் கத்தாமல் நின்று விடும். வெள்ளாடு, அங்கும் இங்கும் ஓடிக் கத்தி ஓலமிடும்.

click me!