1.. தலை சற்று பெரியதாக, அகலமான மூக்கும், வாயும் கொண்டதாக இருக்கவேண்டும். ஆட்டின் முகத்தில் பெண்மைத் தோற்றம் நன்கு தெரியவேண்டும்.
2.. கண்கள் பெரிதாக அகன்று பளிச்சென்று இருக்கவேண்டும்.
3.. கழுத்து மற்றும் தோள்பட்டை கழுத்து மெலிந்து நீளமாகவும், சமமாகவும் இருக்கவேண்டும். தோள்பட்டை, பின்கழுத்துப் பகுதிகள், கழுத்துடன் நன்கு இணைந்திருக்கவேண்டும்.
4.. மார்பு நன்கு அகன்று மென்மையான தோற்றத்துடன் இருக்கவேண்டும்.
5.. முன்னங்கால் நல்ல தோற்றத்துடனும், வலுவுடனும் இருக்கவேண்டும்.
6.. பாதத்தை ஊனி நேராக நிற்கவேண்டும். காலைச்சாய்த்தவாறோ அல்லது நொண்டியபடி நடப்பதாகவோ இருக்கக்கூடாது.
7.. உடல் சற்று வளைந்து குழியுடன் இருக்கவேண்டும். பின்பகுதி தோள்பட்டையிலிருந்த இடுப்பு வரை நேராகவும் வால் பகுதியில் சற்று இறங்கியும் காணப்படலாம். பின்பகுதியில் அதிகக் குழுி இருத்தல் கூடாது. கழுத்திலிருந்து வால் வரை நீளம் அதிகமாக இருத்தல் நலம்.
8.. விலா எலும்புகள் இவை நன்கு புடைத்து, ஆடுகள் தாவும் போது கால்களுக்கு வலு சேர்க்கும் வகையில் இருக்கவேண்டும். வயிறு விலா எலும்பினைத் தாண்டி பெருத்து இருக்கக்கூடாது.
9.. பின் பாகங்கள் தொடை, பின்னங்கால் இணையுமிடம், இடுப்பு போன்ற பாகங்களுக்கிடையே போதுமான இடைவெளி இருக்கவேண்டும். பின்னங்கால்கள் முன்னே பார்த்து இருக்கவேண்டும்.
10.. பின்னங்கால்கள் பின்புறக் கால்களின் வளைவுகள் நன்கு இணைந்து எந்த ஒரு தொங்கலுமின்றி வலுவுடன் இருக்கவேண்டும்.
11.. மடி மற்றும் காம்புகள் மடியானது உடலின் அடியில் கீழே தொங்கியவாறு ஆட்டின் உடல் எடைக்கு ஏற்ற விகிதத்தில் அமைந்திருக்க வேண்டும். பக்கங்களில் இருந்து பார்க்கும் பொது பின்னங்கால்களுக்குச் சற்று முன்புறம் அமைந்திருக்கவேண்டும்.
பால் கறந்த பின்பு தளர்ந்து விடுவதாக, மென்மையானதாக இருக்கவேண்டும். காம்பு, நாளங்கள் எந்த சுருக்கமுமின்றி இருக்கவேண்டும். சராசரி நீளமுள்ள காம்பும் வயிற்றிலிருந்து நன்கு படர்ந்த நரம்புகளுடன் மடி நன்கு இருக்கவேண்டும்.
12.. தோல் மற்றும் உரோமங்கள் தோல் மென்மையானதாக வளையக்கூடியதாக தளர்ந்த நிலையில் இருக்க வேண்டும்.