தயாரிப்பு முறை
1.. மண்புழு உரம் உற்பத்தி செய்ய நிழலுடன் அதிகளவு ஈரப்பதம் உள்ள குளிர்ச்சியான பகுதியாக இருக்க வேண்டும்.
undefined
2.. திறந்த வெளியில் உற்பத்தி செய்வதாக இருந்தால், நிழலான இடத்தை தேர்ந்தெடுக்கவும்.
3.. வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாப்பதற்கு, தென்னைக்கீற்றுக் கூரையை பயன்படுத்தலாம்.
4.. சிமெண்ட் தொட்டி கட்டுவதற்கு அதன் உயரம் 3 அடியாகவும் அகலம் 3 அடியாகவும் நீளம் உங்கள் விருப்பமாக அமைத்து கொள்ளலாம்.
5.. மண்புழு உரம் உற்பத்திகான படுக்கை. தென்னை நார்கஅழகிரி கழிவு அல்லது கரும்புத் தோகைகளை மண்புழு உரம் உற்பத்திக்கான படுக்கையின் அடிப்பாகத்தில் 6 செ.மீ . உயரத்திற்கு பரப்ப வேண்டும். இதற்கு மேல் தண்ணீரைத் தெளிக்க வேண்டும்.
6.. இப்போது நாம் பாதி மக்கிய கால்நடைக் கழிவுடன் இலை மக்குக் கழிவு மற்றும் காய்கறி மக்கு போன்ற கழிவுகளை படுக்கையில் நிரப்ப வேண்டும். ஈரப்பதம் 65% இருக்க வேண்டும். நாம் தேர்ந்தெடுக்கப்பட்ட மண்புழுவை சமமாக பரப்ப வேண்டும்.
7.. ஒரு மீட்டர் நீளம், ஒரு மீட்டர் அகலம், ஒரு மீட்டர் உயரத்திற்கு ஒரு கிலோ மண்புழு தேவைப்படுகிறது.
8.. நாம் தினமும் தண்ணீர் தெளிப்பது அவசியம். இதனுடைய ஈரப்பதம் 65% இருக்கு வேண்டும். தண்ணீரை ஊற்றக்கூடாது, தெளிக்க வேண்டும் மேலும் அறுவடைக்கு முன்னதாக தண்ணீர் தெளிப்பதை நிறுத்தி விட வேண்டும்.
9.. இப்போது நாம் மண்புழு உரப் படுக்கையில் மேல் உள்ள மண்புழுக் கழிவினை மட்டும் அறுவடை செய்ய வேண்டும். இந்த அறுவடை 5 நாட்களுக்கு ஒருமுறை செய்ய வேண்டும்.
10.. எப்போதும் நாம் கையால்தான் புழுகழிவினை சேகரித்து நிழலில் குவித்து வைக்க வேண்டும் அல்லது இருட்டான அறையில் 45% ஈரப்பதத்தில் சூரிய ஒளி படாதவாறு வைக்க வேண்டும்.
11.. திறந்த வெளியில் உரத்தை சேமிக்கும்போது தண்ணீர் தெளித்து ஈரப்பதத்தை காக்க வேண்டும்.இதனால் இந்த மண்புழு உரத்தில் உள்ள நுண்ணுயிர்கள் அழிவதைத் தடுக்கலாம்.
12.. முக்கியமாக கவனிக்க வேண்டியவை இந்த உரத்தை பயிர்களுக்கு இட்டவுடன் மண் அணைத்து உடனடியாக தண்ணீர் பாச்ச வேண்டும்.மண்புழு உரம் சூரிய ஒளியில் பட்டால் இதில் உள்ள நுண்ணுயிர்கள் அழிந்துவிடும். அதனால் கண்டிப்பாக எல்லாப் பயிர்களுக்கும் இட்டவுடன் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.