புழுக்களின் தாக்குதலில் இருந்து பயிர்களைப் பாதுகாக்க இதோ டிப்ஸ்….

First Published Aug 14, 2017, 12:33 PM IST
Highlights
how to protect crops from insects


 

 

1.. அரை கிலோ துளசியை, ஐந்து லிட்டர் தேங்காய் தண்ணீரில் 5 நாட்கள் ஊற வைக்க வேண்டும். இடையில் தினம் ஒரு முறை கலக்கிவிடுவது நல்லது.

 

2.. ஐந்தாவது நாளில் பாத்திரத்தில் உள்ள துளசி மட்கி, தேங்காய்த் தண்ணீருடன் கலந்து, ஒருவித காரவாசனையுடன் இருக்கும்.

 

3.. அதனை சுத்தமான துணியில் வடிகட்டி, துணியில் தங்கியிருக்கும் அழுகிய துளசி இலைகளை துணியோடு சேர்த்து பிழியும் போது வடியும் சாறையும் கலவையில் சேர்க்க வேண்டும்.

 

4.. ஐந்து லிட்டர் துளசி - தேங்காய்  தண்ணீருடன் கலந்து கைதெளிப்பான் கொண்டு, காலை வேளையில் பூவெடுத்து நிற்கும் செடிகள் மீது தெளிக்கலாம்.

 

5. இதனால் பூச்சிகள் ஒழிவதுடன், மலர்ந்த பூக்கள் உதிராமல் பிஞ்சுகளாகவும் மாறும்.

 

6.. காய்ப் பருவத்தில் புழுக்களின் தாக்குதல் அதிகம் காணப்படும். பச்சைப்புழு, காய்த் துளைப்பான், பொறிவண்டு போன்ற பூச்சிகள் காய்களைத் துளையிட்டு சேதாரப்படுத்தும். வேம்புக் கரைசலை செடிகளின் மீது தெளித்து இதைக் கட்டுப்படுத்தலாம்.

click me!