மானாவரி விவசாயம்…

 |  First Published Nov 13, 2016, 2:36 AM IST



பசுமைப் புரட்சியின் காரணமாக நவீன சாகுபடி முறைகளும் வேளாண இயந்திரங்களும் புகுத்தப்பட்டதால் பாரம்பரிய சாகுபடி முறைகள் பெரும்பாலும் ஒழிக்கப்பட்டு விட்டது. 

அப்படி ஒழிக்கப்பட்டதில் முதன்மையானது. மானாவாரி விவசாயம்.

Tap to resize

Latest Videos

கொண்டைக்கடலை, மக்காச் சோளம் உளுந்து எள் போன்ற மிகச் சில பயிர்களே ஆங்காங்கே மானாவாரியில் சாகுபடி செய்யப்படுகின்றன. மற்ற பெரும்பாலான பயிர்கள் ஒழிக்கப்பட்டுவிட்டது. விதைகள்கூட கிடைக்காது.

காரணம் மானாவாரி சாகுபடியில் முன்பெல்லாம் கால்நடைகளும் மனித உழைப்பும் தானியக்கூலியும் சொந்த விதைகளும்தான் முழுப்பங்கு வகித்தன. பணத் தேவை இருக்கவில்லை. 

ஆனால் இப்போது பணம் இல்லாமல் அதுவும் மானாவாரி விவசாய வருமானத்துக்கு மேல் இரண்டு அல்லது மூன்று மடங்குக்கு மேல் செலவுசெயாமல் பயிர் செய்யமுடியாது என்கிற நிலையில் அப்படிப்பட்ட விவசாயமே கைகழுவப்பட்டுவிட்டது!

மானாவாரி விவசாய வருவாய் வரக்கூடிய காலம் என்பதால்தான் தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற பழமொழியே உருவானது. அது இப்போது பழங்கதை ஆகிவருகிறது. 

அதன்காரணமாக ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழியும் அர்த்தமற்றதாக ஆகிவிட்டது! 

மழை எப்போது பெய்யும் என்று இருந்த காலம் போய் மழைபெய்தாலும்  தரிசாகவே நிலங்கள் கிடக்கும் பரிதாப நிலைக்கு இன்று மானாவாரி விவசாயம் தள்ளப்பட்டுவிட்டது. இதற்கான பின் விளைவுகளும் மோசமானதாகவே இருக்கும்!

click me!