Asianet News TamilAsianet News Tamil

சோயுஸ் ராக்கெட்டில் விண்வெளிக்குச் செல்லும் மூன்று ரஷ்ய வீரர்கள்! புடின் போடும் பிளான் என்ன?

நாசா விண்வெளி வீரர் டிரேசி டைசன், ரஷ்யன் ஒலெக் நோவிட்ஸ்கி மற்றும் பெலாரஸின் மரினா வாசிலெவ்ஸ்கயா ஆகியோருடன் கஜகஸ்தானில் உள்ள பைகோனூர் ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

Russian Soyuz rocket launches three astronauts to International Space Station sgb
Author
First Published Mar 23, 2024, 10:26 PM IST

ரஷ்யயா மூன்று விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) வெற்றிகரமாக அனுப்பியுள்ளது. சனிக்கிழமையன்று ஏவபட்ட சோயுஸ் ராக்கெட் மூலம் அவர்கள் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டிருக்கின்றனர். திட்டமிட்டதைவிட இரண்டு நாள் தாமதத்திற்குப் பின் இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.

நாசா விண்வெளி வீரர் டிரேசி டைசன், ரஷ்யன் ஒலெக் நோவிட்ஸ்கி மற்றும் பெலாரஸின் மரினா வாசிலெவ்ஸ்கயா ஆகியோருடன் கஜகஸ்தானில் உள்ள பைகோனூர் ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

ரஷ்ய விண்வெளி அமைப்பின் தலைவர் யூரி போரிசோவின் கூற்றுப்படி, முதலில் ராக்கெட் ஏவுதல் வியாழன் அன்று திட்டமிடப்பட்டது. மின்னழுத்த வீழ்ச்சி காரணமாக தானியங்கி பாதுகாப்பு அமைப்பில் பிரச்சினை ஏற்பட்டதால், லிப்ட்ஆஃப் செய்வதற்கு 20 வினாடிகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.

இருப்பினும், ராக்கெட்டின் இரண்டாவது முயற்சி அசம்பாவிதம் இல்லாமல் நிறைவேறியது. எட்டு நிமிடங்களுக்குப் பிறகு, ராக்கெட்டின் மேல் இருந்த ஸ்பேஸ் கேப்ஸ்யூல் பிரிந்து சுற்றுப்பாதையில் நுழைந்தது. இரண்டு நாள், 34 சுற்றுப்பாதையில் பயணத்தை மேற்கொண்டு சர்வதேச விண்வெளி மையத்தை அடையும்.

ஏசி ஓடிக்கிட்டே இருந்தாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? இந்த ஐடியாவை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!

Russian Soyuz rocket launches three astronauts to International Space Station sgb

முதலில், வியாழக்கிழமை திட்டமிட்டபடி ஏவுதல் நடந்திருந்தால், பயணம் குறுகியதாக இருந்திருக்கும், இரண்டு சுற்றுப்பாதைகள் மட்டுமே தேவைப்பட்டிருக்கும் என்று ரஷ்ய விண்வெளி நிறுவனம் சொல்கிறது.

மூன்று விண்வெளி வீரர்களும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் குழுவினருடன் இணைவார்கள். நாசா விண்வெளி வீரர்களான லொரல் ஓ'ஹாரா, மேத்யூ டொமினிக், மைக் பாராட் மற்றும் ஜீனெட் எப்ஸ், ரஷ்ய வீரர்கள் ஒலெக் கொனோனென்கோ, நிகோலாய் சப் மற்றும் அலெக்சாண்டர் கிரெபென்கின் ஆகியோர் ஏற்கெனவே சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ளனர்.

நோவிட்ஸ்கி, வாசிலெவ்ஸ்கயா மற்றும் ஓ'ஹாரா ஆகிய மூவரும் ஏப்ரல் 6ஆம் தேதி பூமிக்குத் திரும்புவார்கள். உக்ரைன் ரஷ்யா போர் மூண்டதை எடுத்து ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் ரஷ்யா இந்த விண்வெளி பயணத்தை மேற்கொள்கிறது. நாசாவும் அதன் கூட்டணி அமைப்புகளும் குறைந்தபட்சம் 2030 வரை சர்வதேச விண்வெளி நிலையத்தை தொடர்ந்து பயன்படுத்த திட்டம் வகுத்துள்ளன.

புவிசார் அரசியல் பதட்டங்கள் இருந்தாலும், வணிக செயற்கைக்கோள்களை ஏவுவதற்கும், சர்வதேச விண்வெளி நிலையத்திக்கு சரக்குகளை கொண்டு செல்வதற்கும் ரஷ்யா தனது விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்புகிறது.

சம்மர் சேலுக்காக விலையைக் குறைத்த ஸ்கோடா! கோடியாக் காருக்கு செம டிஸ்கவுண்ட் இருக்கு!

Follow Us:
Download App:
  • android
  • ios