Asianet News TamilAsianet News Tamil

இந்த நாட்டில் செம்மறி ஆடுகள் மீது 'Axe Body Spray' தெளிக்கிறாங்க.. காரணம் தெரிஞ்ச ஷாக் ஆவிங்க!!

பிரிட்டனில் செம்மறி ஆடுகள் சண்டையிடுவதை தடுக்க, 'Axe Body Spray' பயன்படுத்துவதாக ஒரு செய்தி வெளிவந்துள்ளது. 

british shepherds are spraying axe body spray to keep sheep from fighting in tamil mks
Author
First Published Apr 22, 2024, 3:57 PM IST

'Axe Body Spray' தயாரிப்பாளர்கள் இதை ஒரு பாராட்டாக எடுத்துக் கொள்ள வேண்டுமா என்று எனக்கு தெரியவில்லை. ஏன் அப்படி? என்று நீங்கள் நினைத்தால் இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்...

பொதுவாகவே செம்மறி ஆடு வளர்ப்பு என்பது மிகவும் கடினம் என்று சொல்லலாம். ஏனெனில், ஆடுகளுக்கு இடையே தாக்குதல் வருவது வழக்கம். மேலும் அவற்றை தடுக்கவும் செம்மறி பண்ணையாளர்கள் பல யுக்திகளையும் பின்பற்றுவார்கள். ஆனால், இங்கிலாந்தில் இருக்கும் ஒரு செம்மறி பண்ணையாளர், செம்மறியாடுகளின் சண்டையை தடுக்க ஒரு வித்தியாசமான முறையை கையாண்டுள்ளார். அவை என்ன என்பதை குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்..

உங்களுக்கு தெரியுமா? செம்மறி பண்ணையாளர்கள் செம்மரி ஆடுகள் சண்டையிடுவதை தடுக்க, Lynx என அறியப்படும் 'Axe Body Spray' பயன்படுத்துவதாக ஒரு செய்தி வெளிவந்துள்ளது. 

அது வேறு எங்குமில்லை, பிரிட்டனில் தான். ஏனென்றால், ஆடுகளின் மீது தெளிக்கப்படும் அந்த வாசனையானது ஆடுகளுக்கு இடையே சண்டைகள் வருவதைத் தடுக்கிறது. சொல்லப்போனால் அந்த வலுவான வாசனை ஆனது ஆடுகளுக்கு இடையே சண்டையிடுவதை தூண்டும் ஹார்மோன்களை மறைக்கிறது.

இதையும் படிங்க:  தினமும் தங்கத்தை கக்கும் அதிசய எரிமலை.. எந்த நாட்டில் இருக்கு தெரியுமா..?

இங்கிலாந்தில் உள்ள, செம்மறி பண்ணையாளரான 55 வயதான Sam Bryce என்பவர் Ladies Who Lamb என்ற Facebook group ல், Axe Body Spray வை செம்மறி ஆடுகளின் மீது தெளித்தால் அவற்றிற்கிடையே சண்டகள் நிறுத்தப்படும் என்று ஒரு ஆலோசனையை சொன்னார்.

அவர் சொன்ன படி, இந்த சோதனையை செய்து பார்த்தபோது, பண்ணையில் செம்மறி ஆடுகள் சண்டையிடுவதை நிறுத்தியதாக பலர் தங்களது கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர். ஆதலால், இந்த இங்கிலாந்து மட்டுமின்றி, உலகளவில் இந்த முறையை பின்பற்றுகின்றனர்.

இதையும் படிங்க: சிறுவயதில் அச்சகத்தில் வேலை செய்த சிறுவன்.. பின்னாளில் அமெரிக்க டாலரில் இடம்பெற்ற கதை தெரியுமா?

1983ஆம் ஆண்டில் Franceல் Uniliver என்ற நிறுவனத்தால் Axe முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உட்பட நாடுகளில், Axe வர்த்தக முத்திரை ஏற்கனவே எடுக்கப்பட்ட சந்தைகளில் இந்த பிராண்ட் 'Lynx' என்ற பெயரில் விற்கப்பட்டது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Follow Us:
Download App:
  • android
  • ios