Asianet News TamilAsianet News Tamil

'துபாயில் கோயில் கட்டியதால்தான் வெள்ளத்தில் தத்தளிக்கிறது'; வைரலாகும் பாகிஸ்தானியரின் பேச்சு

சிலை உடைப்பவர்களின் பூமியில் விக்கிரக வழிபாட்டாளர்களுக்காக கோயில் கட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். "சமீபத்தில் அங்கு கோயில் கட்டியதால்தான் துபாய் அல்லாஹ்வின் கோபத்தை மழையின் வடிவில் எதிர்கொண்டிருக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.

Dubai faced Allah's wrath because it built BAPS Mandir: Pakistani's shocking take on historic floods sgb
Author
First Published Apr 22, 2024, 5:06 PM IST

பாகிஸ்தானியர் ஒருவர் துபாயில் சமீபத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தையும் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் கட்டப்பட்டுள்ள சுவாமிநாராயண் கோயிலுடன் தொடர்புபடுத்தி பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த பிப்ரவரி 14 அன்று அபுதாபியில் அமீரகத்தின் முதல் இந்துக் கோவிலான சுவாமி நாராயண் கோவிலைத் திறந்து வைத்தார். கோயில் திறக்கப்பட்ட சில மாதங்களுக்குள் அதைப்பற்றி அதிர்ச்சி அளிக்கும் கருத்து சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

வறண்ட வானிலை நிலவும் பாலைவன பூமியான ஐக்கிய அரபு அமீரகத்தில் அண்மையில் வரலாறு காணாத அளவுக்கு பெருமழை கொட்டித் தீர்த்தது. அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் 75 ஆண்டுகளில் மிக அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது எனக் கூறியது.

ஆத்தாடி வாட்ச் மட்டுமே இத்தனை லட்சமா! ஷங்கர் மகள் திருமண ரிசப்ஷனில் கண்ணைப் பறித்த நயன்தாராவின் வாட்ச்!

இந்நிலையில், சமூக ஊடகங்களில்  வெளியான வீடியோ ஒன்றில் ஒரு பாகிஸ்தானியரின் பேச்சு அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. துபாயில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளம் தெய்வம் அளித்த தண்டனை என்று கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அபுதாபியில் கட்டிய பாப்ஸ் மந்திர் எனப்படும் சுவாமிநாராயண் கோயில்தான் இதற்குக் காரணம் என்று அவர் கூறினார்.

சிலை உடைப்பவர்களின் பூமியில் விக்கிரக வழிபாட்டாளர்களுக்காக கோயில் கட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். "சமீபத்தில் அங்கு கோயில் கட்டியதால்தான் துபாய் அல்லாஹ்வின் கோபத்தை மழையின் வடிவில் எதிர்கொண்டிருக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.

இயற்கை பேரிடருக்கு துபாயில் கட்டப்பட்டுள்ள இந்து கோயிலை காரணம் கூறும் இந்த வெளிப்படையான வெறுப்புப் பேச்சு ட்விட்டரில் சூடான விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜில்லுன்னு ஒரு செய்தி! அடுத்த 3 மணிநேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Follow Us:
Download App:
  • android
  • ios