Asianet News TamilAsianet News Tamil

“நான் இதற்காக வெறுப்பு பிரச்சாரத்தை எதிர்கொண்டேன்..” லண்டனில் படிக்கும் இந்திய மாணவர் குற்றச்சாட்டு..

லண்டன் பொருளாதார பள்ளியில் படிக்கும் இந்திய மாணவர் ஒருவர், தான் போட்டியிட்ட மாணவர் சங்க தேர்தலில், தனக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

Because I Support Modi, Bharat Indian student alleges hate campaign against him at london university Rya
Author
First Published Mar 27, 2024, 11:20 AM IST

கடந்த ஆண்டு அக்டோபரில் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தின் போது இந்திய மூவர்ணக் கொடியை ஏந்தி தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தவர் சத்யம் சுரானா. இவர் தான் தற்போது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். லண்டன் பொருளாதார பள்ளியில் படிக்கும் அவர் தான் போட்டியிட்ட மாணவர் சங்க தேர்தலில், தனக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவுக்கும், ராமர் கோயிலுக்கும், பிரதமர் மோடிக்கும், பாஜகவுக்கும் ஆதரவளித்ததே தான் துன்புறுத்தபட்டதற்கு காரணம் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள சத்யம் சுரானா “கடந்த வாரம் எனக்கு கடினமாக இருந்தது. கடுமையான பிரச்சாரத்திற்குப் பிறகு, லண்டன் பொருளாதார பள்ளியில் உள்ள பல்வேறு சர்வதேச மாணவர் சமூகத்தின் ஆதரவுடன் நானும் எனது குழுவும் ஆசீர்வதிக்கப்பட்டோம். 

ஐந்தே வாரத்தில் 4900க்கும் மேற்பட்ட வெற்றியாளர்கள் - ஹோலி பண்டிகையை முன்னிட்டு களைகட்டும் Gulf Ticket!

எனது சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டன, சிதைக்கப்பட்டன. என் மீது அவதூறு பரப்பப்பட்டது, எனது பிரச்சாரங்கள் செய்யப்பட்டன, ரத்து செய்யப்பட்டன. வாக்களிக்கும் காலகட்டத்திற்கு முந்தைய 24 மணி நேரத்தில், நான் இஸ்லாமிய வெறுப்பு, இனவெறி, பயங்கரவாதி, பாசிஸ்ட், என முத்திரை குத்தப்பட்டேன். என்னை ஒரு பாஜக உறுப்பினராக இணைத்து, இந்தியாவின் இறையாண்மையை இழிவுபடுத்துவது வரை சென்றது. மூவர்ணக் கொடியை எடுத்தது கூட கேள்விக்குள்ளாக்கப்பட்டது. 

 

இதற்கெல்லாம் என்ன காரணம் தெரியுமா. ஏனென்றால் நான் பிரதமர் மோடியை ஆதரித்தேன். ஏனென்றால் நான் பாஜகவை ஆதரித்தேன். ஏனென்றால், ராமர் கோயில் கட்டப்பட்டபோது நான் உண்மைக்காக குரல் கொடுத்தேன். ஏனென்றால், பிரதமர் மோடியின் தலைமையில் பாரதம் அடைந்து வரும் முன்னேற்றத்தை நான் ஆதரித்தேன். ஏனென்றால் நான் தீவிரவாதத்திற்கு எதிராக பேசினேன். ஏனென்றால் நான் பாராவுக்கு ஆதரவாகப் பேசினேன்..

இந்த பிரச்சாரத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதற்கான பதில் தெளிவானது. 'இந்தியர்கள் இப்போது வழிநடத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தவர்கள் என்பதை ஜீரணிக்க முடியாத வெட்கமற்ற மற்றும் பிரச்சாரத்தால் உந்தப்பட்ட சில இந்தியர்களால் இது செய்யப்பட்டது.

வாஷிங் மெஷினில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2.5 கோடி பணம்.. அமலாக்கத்துறை பறிமுதல்..

“இன்று நான் அதை சத்தமாகவும் பெருமையாகவும் சொல்கிறேன்: மக்கள் இப்போது இந்தியாவுக்கு எதிரானவர்களாக இருக்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் மோடிக்கு எதிரானவர்கள். மோடியின் தோல்வியுற்ற அரசியல் எதிரிகள் இப்போது உலகம் முழுவதும் பரவி, உலகளாவிய அரங்கைப் பயன்படுத்தி அவரது உருவத்தை சிதைக்க முயற்சிக்கின்றனர். நான் எனது தாய்நாட்டுக்கு திரும்புவேன் என்று நம்புகிறேன். இதிலிருந்து பின் வாங்காமல் மேலும் எனது நாட்டிற்காகவும், பிரதமர் நரேந்திர மோடிக்காகவும் தொடர்ந்து குரல் கொடுப்பேன்.”என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios