Asianet News TamilAsianet News Tamil

சாக்‌ஷி அண்ணிக்கு பிறகு தோனி பாய் என்னயத்தான் தூக்கியிருக்காரு – தோனியை கிண்டலடித்த ஜடேஜா!

சாக்‌ஷி அண்ணியைத் தொடர்ந்து தோனி என்னைத் தான் தூக்கியிருப்பாரு என்று ரவீந்திர ஜடேஜா கூறியுள்ளார்.

Ravindra Jadeja said that I think Dhoni would have lifted me after Sakshi rsk
Author
First Published Mar 29, 2024, 7:25 PM IST

கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் 2023 தொடரின் 16ஆவது சீசனின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. இதில், 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 47 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்ஸர் உள்பட 96 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். விருத்திமான் சகா 54 ரன்கள் எடுத்தார்.

விராட் கோலியின் தந்தை ஒரு கிரிமினல் வழக்கறிஞர் - கோலியின் சகோதரி, சகோதரன் என்ன செய்கிறார்கள் தெரியுமா?

பின்னர், 215 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு சிஎஸ்கே அணி பேட்டிங் செய்தது. இதில், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவோன் கான்வே இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். மூன்று பந்துகள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், மழை கன மழையாக பெய்யத் தொடங்கியது. கடைசியாக போட்டியானது நள்ளிரவு 12.10 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. மேலும், சிஎஸ்கே வெற்றிக்கு 15 ஓவர்களில் 171 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இது ஆர்சிபி ஏரியா – 32ல் 18ல் வெற்றி, கேகேஆருக்கு சாதமான பெங்களூரு!

டெவோன் கான்வே 47 ரன்கள், ருதுராஜ் கெய்க்வாட் 26 ரன்கள், அஜின்க்யா ரஹானே 27 ரன்கள், அம்பத்தி ராயுடு 19 ரன்கள் எடுக்க கடைசியாக ஷிவம் துபே மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் இணைந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். இதில், கடைசி ஓவரை யாஷ் தயாள் விசீனார். அந்த ஓவரில், சிஎஸ்கே வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது.

முதல் 4 பந்தில் 3 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. கடைசி 2 பந்தில் சிஎஸ்கே வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 5ஆவது பந்தில் ரவீந்திர ஜடேஜா சிக்ஸர் விளாசினார். கடைசி பந்தில் பவுண்டரி விளாச, சிஎஸ்கே 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5ஆவது முறையாக சாம்பியனானது. சிஎஸ்கேயின் வெற்றிக்கு வித்திட்ட ரவீந்திர ஜடேஜாவை, தோனி தனது தோளில் தூக்கிய புகைப்படம் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

இது பெங்களூரு கோட்டை – இங்கு ரஸலால் ஒன்னுமே செய்ய முடியாதா? டிரெண்டை மாற்றுமா கேகேஆர்?

இந்த நிலையில் தான் நேற்று சிஎஸ்கே புரோமோஷனல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தோனி, ஜடேஜா, ஷிவம் துபே, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது கடந்த ஆண்டு தோனி, ஜடேஜாவை தூக்கிய நிகழ்வு குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தோனி, திறமை மற்றும் இலக்கை அடைய வேண்டும் என்ற மனதை கொண்டவர் என்பதால், அவர் மீது முழு நம்பிக்கை இருப்பதாக கூறினார்.

இந்த சூழ்நிலையிலும் ஜடேஜாவிற்கு இலக்கை அடைவதற்கான திறமை மற்றும் மனப்பான்மை இருப்பதை நான் உறுதியாக நம்பியிருந்தேன். கடைசி பந்திற்கு முன்பாக ஜடேஜா அடித்த சிக்ஸ் மிகவும் கடினமாக இருந்ததாக இருந்திருக்கும். டிவியை பார்க்கும் போதே அது தெளிவாகவே தெரிகிறது. எல்லோருமே அழுத்தத்தில் தான் இருக்கின்றனர்.

ஒரே ஒரு போட்டியால வந்த வினை: மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்கட்சி பூசல், மலிங்கா – ஹர்திக் மோதல்?

நாங்களும் ஜெயிக்க வேண்டும், எதிரணியும் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள். இது எல்லோருக்கும் கடினம் தான். நாங்கள் வெற்றியின் பக்கத்தில் இருப்பது மகிழ்ச்சி என்று கூறியுள்ளார். இவரைத் தொடர்ந்து பேசிய ரவீந்திர ஜடேஜா கூறியிருப்பதாவது: சாக்‌ஷி அண்ணிக்கு பிறகு தோனி என்னை தான் தூக்கியிருக்கிறேன் என்று கிண்டலாக கூறியுள்ளார்.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios