வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை கொட்டியது. நீர் பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் அதிகரித்ததால் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.
Image credits: social media
மழையால் வெள்ளம்
பெஞ்சல் புயல் பாதிப்பால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், அடுத்த சுற்று ஆட்டத்திற்கு மீண்டும் தயாரானது கன மழை
Image credits: social media
சென்னையை குறி வைத்த மழை
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் வட கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு- சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் இன்று முதல் கன மழை பெய்யும்
Image credits: social media
தமிழ்நாடு வெதர்மேன் அலர்ட்
மழை மேகங்கள் கடலில் உள்ளது. சென்னையில் இன்றும் நாளையும் கன மழை பெய்யும், இன்னும் சில மணி நேரத்தில் மழை தொடங்கும்
Image credits: social media
கடைசி மழையா.?
வடகிழக்கு பருவமழை சீசனில் கடைசி மழை இது இல்லை- டிசம்பர் 26, 27 ஆம் தேதிகளில் மீண்டும் மிதமான மழைக்கு வாய்ப்பு- தமிழ்நாடு வெதர்மேன்
Image credits: social media
மழை அரக்கன் வருகிறானா.?
யூடியூப்பில் கூறுவது போல் மழை அரக்கன் சென்னையை குறிவைத்து வருகிறானா.? பயப்பட வேண்டுமா என்றால் தேவையில்லை- தமிழ்நாடு வெதர்மேன்
Image credits: Social media
எந்த மாவட்டத்தில் மழை
டெல்டா, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் மழை இல்லை- தென் தமிழகம், கன்னியாகுமரியில் மழை பெய்யும் - தமிழ்நாடு வெதர்மேன்