தமிழகத்தில் மொத்தம் 4,829 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. டாஸ்மாக் கடைகளில் நாள் ஒன்றுக்கு சுமார் 100 கோடிக்கு மது விற்பனை நடைபெறுகிறது.
tamilnadu Apr 04 2026
Author: vinoth kumar Image Credits:Our own
Tamil
டாஸ்மாக் நிறுவனம்
வார விடுமுறை மற்றும் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களில் வருமானம் கொட்டும். அரசுக்கு வருமானத்தை கொட்டி கொடுக்கும் துறையாக டாஸ்மாக் நிறுவனம் இருந்து வருகிறது.
Image credits: Our own
Tamil
பூரண மதுவிலக்கு கோரி ஆர்ப்பாட்டம்
ஆனால் பாமகவில் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி வலியுறுத்தி வருகின்றனர்.
Image credits: Our own
Tamil
தமிழக சட்டமன்ற தேர்தல்
இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Image credits: Our own
Tamil
தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை
அதாவது ஏப்ரல் 21, 22, 23 ஆகிய மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Image credits: Our own
Tamil
வாக்கு எண்ணிக்கை போது டாஸ்மாக் விடுமுறை
அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான மே 4ம் தேதியும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் இயங்காது. மீறி மது விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
Image credits: Our own
Tamil
மே 1ம் தேதி விடுமுறை
இதனிடையே மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அன்றைய தினமும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை. மொத்தமாக 5 நாட்கள் விடுமுறை.