தமிழகத்தில் மொத்தம் 4,829 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதை அரசே எடுத்து நடத்தி வருகிறது. நாளொன்றுக்கு 100 முதல் 125 கோடிக்கு விற்பனை செய்யப்படுகிறது.
tamilnadu Sep 08 2025
Author: vinoth kumar Image Credits:Our own
Tamil
வார இறுதி நாட்களில் விற்பனை ஜோர்
வார இறுதி நாட்களில் ரூ.200 கோடி அளவுக்கும் விற்பனையாகும். பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்ற பண்டிகளை நாட்டிகளில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும்.
Image credits: Our own
Tamil
டாஸ்மாக் வருமானம்
குறிப்பாக வருமானத்தை அள்ளிக்கொடுக்கும் துறையாக டாஸ்மாக் மற்றும் பத்திரப்பதிவு துறை விளங்குகிறது. இரண்டு துறையில் வரும் வருமானத்தை வைத்து தான் அரசு இயந்திரமே இயங்குகிறது.
Image credits: Our own
Tamil
டாஸ்மாக் ஊழியர்கள்
மழை வெள்ளம் புயல் மட்டுமில்லாலம் பண்டிகை காலங்களில் மற்ற அரசு நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டாலும் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு மட்டும் விடுமுறை என்பதே இல்லை.
Image credits: Our own
Tamil
8 நாட்கள் மட்டுமே விடுமுறை
தமிழக அரசு சார்பாக ஆண்டுக்கு 8 நாட்கள் மட்டுமே டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அது எந்தெந்த நாட்கள் என்பதை பார்ப்போம்.
Image credits: Our own
Tamil
டாஸ்மாக் கடைகள்
திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, வடலூர் நினைவு நாள், மே தினம், சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்தநாள், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட 8 நாட்களுக்கு மட்டுமே விடுமுறை.