spiritual

மேஷம்

இன்றைய தினம் மிகச்சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். உடற்பயிற்சி அல்லது யோகா செய்ய தவறவேண்டாம். உத்யோகத்தில் இன்று ஸ்பெஷலான நாளாக இருக்கும்.
 

ரிஷபம்

பொருளாதார நிலையை மேம்படுத்த கடுமையாக உழைத்தாக வேண்டும். பணிச்சுமையால் மன அழுத்தம் அதிகமாகும். மன ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
 

மிதுனம்

முதலீடுகளுக்கு ஏற்ற நேரம் இது. நிதானமாக இருக்கவும். வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். 
 

கடகம்

உங்களது அனைத்து பிரச்னைகளும் இன்று முடிவுக்கு வரும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். 
 

சிம்மம்

பொருளாதார சூழல் மேம்படும். பல வழிகளில் வருவாய் கிடைக்கும். குடும்பத்தினருடன் சொத்து விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்படும். கணவன் - மனைவிக்கு இடையேயான பிரச்னைகள் தீரும். 
 

கன்னி

உங்கள் கெரியர் சார்ந்த வாய்ப்புகள் நிறைய கிடைக்கும். இன்று நீங்கள் எதிர்கொள்ளும் கடினமான சூழல்கள் விரைவில் சாதகமாக மாறும். 
 

துலாம்

பணிமாற்றத்திற்கு முயற்சி செய்ய வேண்டாம்; இது அதற்கு சரியான நேரம் அல்ல. உங்கள் துணை உங்களிடத்தில் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றால் மனமுடைந்து விடாதீர்கள்.
 

விருச்சிகம்

நீங்கள் வேலையில் அதிக பிசியாக இருப்பதால் குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியாது. அது குடும்பத்தினரை வருத்தமடைய செய்யும். 
 

தனுசு

விரைவில் வெற்றியை அடைய போகிறீர்கள். குறுக்கு வழிகளில் பணம் சம்பாதிக்க நினைக்க வேண்டாம். அமைதியாக இருந்து பிரச்னையை தீர்க்கவும். 
 

மகரம்

இன்றைய தினம் உங்களுக்கு மிகச்சிறப்பானதாக இருக்கும். வீண் செலவுகளை தவிர்க்கவும். இல்லையெனில் சேமிப்பு வீணாகும். சொத்துகளில் முதலீடு செய்ய வேண்டாம்.
 

கும்பம்

இன்றைய தினம் அனைத்துமே உங்களுக்கு சாதகமாக நடக்கும். பரபரப்பான வேலைகளுக்கு மத்தியில் உங்கள் அன்பிற்குரியவர்களுக்காகவும் நேரம் ஒதுக்குங்கள்.
 

மீனம்

இன்று உங்களுக்கு மிகச்சிறந்த தினமாக அமையும். உங்கள் கடின உழைப்பிற்காக விருது கிடைக்கலாம். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.  தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். 
 

துளசியை இப்படி நட்டு வைத்தால் வீட்டில் செல்வம் குவியும்!

Today Horoscope 8th May 2023: சொத்துக்களில் முதலீடு செய்ய வேண்டாம்

கோலாகலமாக நடைபெற்ற மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்...!!

அதிர்ஷ்டம் தரும் வாஸ்து செடிகள்! வீட்டில் இதை வைங்க!