பாம்பு செடியை ஏன் கட்டாயம் வீட்டில் வைக்க வேண்டும்?
life-style May 12 2025
Author: Kalai Selvi Image Credits:Pinterest
Tamil
காற்றை சுத்திகரிக்கும்
காற்றை சுத்திகரிக்கும் பண்புகள் இந்த செடியில் உள்ளன. பென்சின், சைலின், டோலுயீன், ஃபார்மால்டிஹைட் போன்ற தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை நீக்கும்.
Image credits: Pinterest
Tamil
வீட்டை அழகாக்கும்
இந்தச் செடியின் இலைகள் பச்சை, வெள்ளை நிறத்தில் இருப்பதால் வீட்டிற்கு தனித்துவமான தோற்றத்தை அளிக்கிறது. எனவே இதை வீட்டின் பெட்ரூம், பால்கனி போன்ற இடங்களில் வைக்கலாம்.
Image credits: pexels
Tamil
பராமரிப்பு குறைவு!
இந்தச் செடியின் சிறப்பு என்னவென்றால் இதை பராமரிப்பது ரொம்பவே ஈசி. 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் ஊற்றினால் போதும்.
Image credits: pexels
Tamil
மண் இல்லாமல் வளரும்
மண் இல்லாமல் தண்ணீரில் மட்டும் வளரும் சில உட்புற தாவரங்களில் ஒன்றுதான் இது. இதை சுத்தமான தண்ணீர் நிரப்பப்பட்ட கண்ணாடி ஜாடையில் வைத்தால் போதும், செழித்து வளரும்.
Image credits: pexels
Tamil
எந்த இடத்தில் வைக்கலாம்?
பெட்ரூம், பால்கனி, குளியலறை போன்ற எங்கு வேண்டுமானாலும் இந்த செடியை நீங்கள் வைத்தால் நன்றாக பொருந்தும். இது அதிக இடத்தை எடுத்துக் கொள்ளாது.
Image credits: pexels
Tamil
அடிக்கடி நட தேவையில்லை
சில செடிகளை சில மாதங்களுக்கு ஒருமுறை மீண்டும் நட வேண்டும். ஆனால் பாம்பு செடிக்கு அப்படி தேவையில்லை. இது மெதுவாக வளரும் வேர்களைக் கொண்டுள்ளது.
Image credits: pexels
Tamil
அதிர்ஷ்டத்தின் சின்னம்!
ஃபெங் சுய், வாஸ்துபடி, பாம்பு செடியானது நல்ல அதிர்ஷ்டம் மற்றும் வலுவான ஆற்றலின் சின்னமாக கருதப்படுகிறது.