கோடையில் நன்கு பழுத்த மாம்பழத்தை சாப்பிடுவது தான் சிறந்தது. மாம்பழம் சூடான தன்மை கொண்டதால் குளிர்காலத்தில் சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல.
காலையில் வெறும் வயிற்றில் மாம்பழம் சாப்பிட்டால் அம்பலத்தன்மை, நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். மேலும் இதில் இருக்கும் சர்க்கரை செரிமானத்தை கெடுக்கும்.
இரவில் மாம்பழம் சாப்பிட்டால் ஜீரணிக்க கடினமாக இருக்கும். கூடுதலாக சர்க்கரையை கொழுப்பாக மாற்றும். இதனால் எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கும் மற்றும் தூக்கத்தை பாதிக்கும்.
உணவுக்குப் பிறகு உடனே மாம்பழம் சாப்பிட்டால் செரிமானத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். இதனால் வாயு, அஜீரணம், வீக்கம் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
ஒரு நாளைக்கு அளவுக்கு அதிகமாக மாம்பழம் சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு மோசமாக பாதிக்கப்பட்டு சர்க்கரை அளவை அதிகரிக்கும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்து.
உடற்பயிற்சிக்குப் பிறகு வியர்வை வெளியேறும். இத்தகைய சூழ்நிலையில் உடனே மாம்பழம் சாப்பிட்டால் உடலில் வெப்பத்தை அதிகரித்து, நீரிழிப்பு பிரச்சினையை ஏற்படுத்தும்.
தொண்டை புண் அல்லது வலி, சளி பிரச்சனை இருந்தால் மாம்பழம் சாப்பிட்டால் பிரச்சனையை மேலும் அதிகரிக்கும்.