அடிப்பிடித்த பிரஷர் குக்கரை நொடியில் சுத்தம் செய்ய சிம்பிள் டிப்ஸ்..!
life-style May 14 2025
Author: Kalai Selvi Image Credits:Pinterest
Tamil
எலுமிச்சை:
ஒரு கப் தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து 15 நிமிடங்கள் மூடிபோட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பிறகு குளிர்வித்து எப்போதும் போல கழுவ வேண்டும்.
Image credits: pinterest
Tamil
கல் உப்பு
உங்களது குக்கர் முழுவதுமாக எரிந்து விட்டால், கல் உப்பை அதில் போட்டு சிறிது நேரம் அப்படியே வைத்துவிட்டு பிறகு சுத்தம் செய்ய வேண்டும்.
Image credits: Pexels
Tamil
பேக்கிங் சோடா
உங்களது குக்கர் அடி பிடித்தால் பேக்கிங் சோடாவை போட்டு உலர்ந்த துணி அல்லது பஞ்சு கொண்டு தேய்த்தால் முற்றிலுமாக கறை நீங்கிவிடும்.
Image credits: Freepik
Tamil
வினிகர் மற்றும் எலுமிச்சை
அடிபிடித்த பிரஷர் குக்கரை வினிகர் மற்றும் எலுமிச்சை கொண்டு சுத்தம் செய்யலாம். இதற்கு அவை இரண்டையும் ஒன்றாக கலந்து சுத்தம் செய்தால் அழுக்குகள் உடனே நீங்கிவிடும்.
Image credits: social media
Tamil
எலுமிச்சை மற்றும் சலவை தூள்
பிரஷர் குக்கரின் கறைகளை சுத்தம் செய்ய எலுமிச்சை மற்றும் சலவைத்தூள் பயன்படுத்தலாம். இதற்கு தண்ணீரில் சலவை தூள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கொதிக்க வைத்து சுத்தம் செய்ய வேண்டும்.
Image credits: Social Media
Tamil
வினிகர் மற்றும் வெங்காய சாறு
எரிந்த பிரஷர் குக்கரில் வெங்காய சாறு மற்றும் வினிகர் ஒன்றாக கலந்து பிரஷர் குக்கரில் ஊற்றி நன்றாக தேய்த்தால் உடனே சுத்தமாகிவிடும்.