உண்மையான தர்பூசணியின் சதை அடர் சிவப்பு அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும். போலியானதோ அதிக பிரகாசமான அல்லது இயற்கைக்கு மாறான தெளிவான நிறத்தில் இருக்கும்.
உண்மையான தர்பூசணி சுவை இனிமையானதாக இருக்கும். போலியானதோ உலோக சுவை, கசப்பு அல்லது செயற்கை இனிமை இருக்கும்.
தர்பூசணியில் இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு கறைகள் இருந்தால் அது போலியான தர்பூசணி என்று அர்த்தம்.
தர்பூசணியை வெட்டும்போது அதிலிருந்து வெளியேறு நீர் தெளிவாக இருந்தால் அது உண்மையானது. அதுவே உடனடியாக நிறமாக மாறினால் அது போலியானது.
கத்தியை வைத்து தர்பூசணி வெட்டும்போது அதன் சாறு மெதுவாக வெளியேறினால் அது உண்மையானது. அதுவே அதிவேகமாக வெளியேறினால் அது போலி.
தர்ப்பூசணியைத் தொட்டு பார்த்து வாங்கவும். அதாவது வெளிப்புறம் உறுதியாக இருந்தால் அது உண்மையானது. மென்மையாக இருந்தால் அது போலி.
தர்பூசணி வெட்டிய பிறகு அதன் சதைப் பகுதி இளஞ்சிவப்பு, அடர் சிவப்பு நிறத்தில் இருந்தால் அது உண்மையானது. ரொம்பவே பிரகாசமான சிவப்பு, ஆரஞ்சு நிறத்தில் இருந்தால் அது போலி.
உண்மையான தர்பூசணி விதை அடர் பழுப்பு அல்லது கருப்பு நிறத்தில் இருக்கும். வெண்மையான அல்லது பச்சை நிறத்தில் இருந்தால் அது போலியானது.
உண்மையான தர்பூசணி நடுநிலை முதல் லேசான இனிப்பு இயற்கை வாசனை கொண்டது. போலியானதோ கடுமையான அல்லது ரசாயன போன்ற வாசனையில் இருக்கும்.
தர்பூசணியில் விரிசல் அல்லது பிளவுகள் இருந்தாலோ, வழக்கத்திற்கு மாறாக கனமாக பெரிய அளவில் இருந்தாலோ வாங்க கூடாது.