life-style
பால், தயிர், சீஸ் உள்ளிட்ட அனைத்துப் பால் பொருட்களும் பல் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. ஏனெனில் இவை அனைத்திலும் கால்சியம் நிறைந்துள்ளன. இது பற்களை ஆழமாக வலுப்படுத்தும்.
ஆப்பிள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி பற்களையும் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. எனவே ஆரோக்கியமான பற்களை பெற ஒரு தினமும் ஆப்பிள் சாப்பிடுங்கள்.
பல் ஆரோக்கியத்திற்கு பாதாம் சிறந்தது. ஏனெனில் இதிலும் கால்சியம் நிறைந்துள்ளதால், அவை பற்களின் வலிமையை அதிகரித்து, பற்களை ஆரோக்கியமாக வைக்க உதவும்.
பச்சை காய்கறிகளில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் அவை ஈறுகளில் ஆரோக்கியமாகவும் பற்களை வலுவாகவும் வைக்க உதவுகின்றது.
ஸ்ட்ராபெரியில் பல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளன. குறிப்பாக இதில் இருக்கும் வைட்டமின் சி பற்களை வலுவாகவும் வெண்மையாகவும் வைக்க உதவுகிறது.
கேரட்டில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது பற்களை வலுவாகவும் ஈறுகளை ஆரோக்கியமாகவும் வைக்க முக்கிய பங்கு வகிக்கிறது.
இவை எல்லாவற்றையும் விட தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியம், வாயை சுத்தம் செய்வது மட்டுமின்றி வறட்சியையும் தடுக்கிறது.