சாப்பிட்ட உடனேயே தூங்கக் கூடாது. இது செரிமான செயல்முறையை பாதித்து, வயிறு உப்புசத்தை ஏற்படுத்தும். குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்து தூங்குவது நல்லது.
சாப்பிட்ட பிறகு நடப்பது அவசியம்தான் என்றாலும், உடனடியாக நடப்பதை தவிர்க்க வேண்டும். 5 நிமிடங்கள் அமர்ந்த பிறகு நடப்பது நல்லது.
சாப்பிட்ட உடனேயே குளிப்பதை தவிர்க்க வேண்டும். இது செரிமான செயல்முறையை மெதுவாக்கும்.
சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிக்கலாம், ஆனால் அதிகமாக குடிக்கக் கூடாது. இது செரிமானத்தை மெதுவாக்கும்.
பழங்களில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஆனால் சாப்பிட்ட உடனேயே அவற்றை சாப்பிடக்கூடாது. ஏனெனில் பழங்கள் விரைவாக ஜீரணமாகும்.
சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் அல்லது சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து வெந்நீர் குடிக்கலாம்.
சாப்பிட்ட உடனேயே டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் அமிலத்தன்மை அதிகமாக உள்ளது. இது செரிமானத்தை தடுக்கிறது.