life-style
வீட்டை சுத்தம் செய்ய விலையுயர்ந்த பொருட்களைப் பயன்படுத்தவேண்டாம். வீட்டில் இருக்கும் சில பொருட்களின் உதவியுடன் எளிமையான வழியில் சுத்தம் செய்யலாம்.
தண்ணீரில் கரைத்த பேக்கிங் சோடாவை கழிவறையில் கறை படிந்த இடத்தில் தேய்த்தால் பளிச் என்று சுத்தமாகும்.
வீட்டில் உள்ள கிருமிகளை நீக்கம் செய்ய வினிகரைப் பயன்படுத்தலாம். வினிகரில் எலுமிச்சை அல்லது தண்ணீரைச் சேர்த்து தெளித்து சுத்தம் செய்யலாம்.
துரு கறையை நீக்க குளிர்பானத்தைப் பயன்படுத்தலாம். இதற்கு குளிர்பானத்தை அலுமினியம் ஃபாயில் வைத்து துருவை சுத்தம் செய்யவும்.
சமையலறை, குளியலறையில் அடிக்கடி துர்நாற்றம் வீசுதா? இதை போக்குவதற்கு எலுமிச்சை சாற்றை, பேக்கிங் சோடாவுடன் பயன்படுத்தலாம்.
சிலிண்டர் மாதிரியான இரும்பு கறையை நீக்க பற்பசையை பயன்படுத்தவும்.
வெள்ளி நகைகள் எளிதில் கருமையாகிவிடும். இதை நகைக்கடைக்குச் சென்று சுத்தம் செய்வதற்குப் பதிலாக, கெட்ச்அப் மூலம் வீட்டிலே சுத்தம் செய்யலாம்.
தரையை பளபளவென மாற்றி மெருகூட்ட ஹைட்ரஜன் பெராக்சைடைப் பயன்படுத்தலாம்.
இந்த டிப்ஸைகளை பயன்படுத்தி, நீங்கள் வீட்டை சுத்தமாக வைத்திருக்கலாம்.