life-style
புகையிலை நுரையீரலுக்கு மட்டுமல்ல, எலும்புகளுக்கும் தீங்கு விளைக்கும். இது எலும்புகளை உருவாக்கும் செல்களை அழிக்கிறது மற்றும் ரத்த நாளங்களையும் சேதப்படுத்துகிறது.
மது உடலில் கார்டிசோல் உற்பத்தி அதிகரித்து, எலும்பு இழப்புக்கு வழிவகுக்கும். எலும்பு ஆரோக்கியத்திற்கு முக்கியமான டெஸ்டோஸ்டொரோன், ஈஸ்ட்ரோன் ஹார்மோன் அளவையும் இது குறைக்கும்.
உட்கார்ந்த வாழ்க்கை முறையும் எலும்பு ஆரோக்கியத்தை பாதிக்கும். எனவே, எலும்பு ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சிகள் மிகவும் அவசியம். நடை பயிற்சி போன்றவற்றை செய்யுங்கள்.
உடலில் உப்புச் சத்து அதிகரிக்கும் போது சிறுநீரில் அதிக கல்ச்சத்தை வெளியேற்றுகிறது. எனவே, அதிக உப்பு எலும்புகளுக்கு நல்லதல்ல.
சூரிய ஒளிபடாமல் வீட்டுக்குள்ளே இருப்பது எலும்பின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. வலுவான எலும்புகளுக்கு வைட்டமின் டி அவசியம். இது சூரிய ஒளியில் கிடைக்கும்.
தவறான உணவு முறை, கால்சியம், வைட்டமின் டி நிறைந்த உணவுகளின் பற்றாக்குறையும் எலும்புகளை பலவீனப்படுத்தும். எனவே ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை மூலம் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம் அல்லது தடுக்கலாம். மேலும் இது எலும்பு தேய்மானத்தையும் குறைக்கும்.