சத்துக்கள் நிறைந்த சர்க்கரைவள்ளி கிழங்கு யார் சாப்பிடக் கூடாது?
life-style Sep 20 2025
Author: Kalai Selvi Image Credits:Social Media
Tamil
செரிமான பிரச்சனை உள்ளவர்கள்
சர்க்கரைவள்ளி கிழங்கில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் இதை அதிகமாக சாப்பிட்டால் வாயு, வீக்கம், அஜீரணம் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
Image credits: Getty
Tamil
சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள்
சிறுநீரக கற்களை உருவாகும் ஆக்சலேட் இதில் உள்ளது. இதுதவிர பொட்டாசியமும் அதிகமாக உள்ளதால் சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் இதை சாப்பிட வேண்டாம்.
Image credits: Getty
Tamil
சர்க்கரை நோயாளிகள்
சர்க்கரைவள்ளி கிழங்கில் இயற்கையாகவே சர்க்கரை உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் இதை அளவாக சாப்பிடுங்கள். இல்லையெனில் பிரச்சனையாகிடும்.
Image credits: Getty
Tamil
குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள்
சர்க்கரை வள்ளி கிழங்கில் பொட்டாசியம் அதிகமாக உள்ளதால் பிபி உள்ளவர்கள் அல்லது அதற்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள் இதை குறைவாக சாப்பிடுங்கள்.
Image credits: Getty
Tamil
எடை இழப்பு
சர்க்கரைவள்ளி கிழங்கில் கலோரிகள் அதிகமாக உள்ளதால் இது உடல் எடையை அதிகரிக்கும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதை சாப்பிட வேண்டாம்.
Image credits: pinterest
Tamil
ஹைப்பர் தைராய்டு
சர்க்கரைவள்ளி கிழங்கில் தைராய்டு எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் இது தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை மோசமாக பாதிக்கும். எனவே இந்த பிரச்சனை உள்ளவர்கள் இதை குறைவாக சாப்பிடுங்கள்.
Image credits: Getty
Tamil
ஒவ்வாமை உள்ளவர்கள்
சக்கரைவள்ளி கிழங்கு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதை சாப்பிட்டால் சிவத்தல், அரிப்பு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே சாப்பிடுவதை நிறுத்துங்கள்.
Image credits: social media
Tamil
வைட்டமின் ஏ
சர்க்கரைவள்ளி கிழங்கில் இருக்கும் பீட்டா கரோட்டின் உடலில் வைட்டமின் ஏ ஆக மாறுவதால், அதை அதிகமாக சாப்பிட்டால் தலைவலி, வாந்தி, கல்லீரல் பிரச்சனை ஏற்படும்.