காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் பால் குடிப்பது பல வீடுகளில் இருக்கும் பழக்கம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் பால் ரொம்பவே நல்லது.
பாலில் புரதம், கால்சியம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்கும்.
பால் பலவீனமான எலும்புகளை வலுப்படுத்தும், தசைகளை உறுதியாக்கும், உடலை சுறுசுறுப்பாக வைக்கும், மூளை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்..
பால் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், வெறும் வயிற்றில் குடிப்பதால் சில நன்மைகள் மற்றும் தீமைகள் உள்ளன.
ஆயுர்வேதத்தின் படி, வெறு வயிற்றில் பால் குடிப்பது நன்மையை விட தீமை தான் அதிகம். காரணம் பாலில் உள்ள லாக்டோஸ் உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கும்.
சிலருக்கு பால் பொருட்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். அப்படிப்பட்டவர்கள் வெறும் வயிற்றில் பால் குடித்தால் வயிற்றுப்போக்கு, வாயு, வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
செரிமான பிரச்சனை உள்ளவர்கள் வெறும் வயிற்றில் பால் குடித்தால் வயிற்றுப்போக்கு, சரும அரிப்பு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
வெறும் வயிற்றில் பால் குடித்தால் அதில் இருக்கும் கால்சியம், இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவது தடுக்கப்படும். பிறகு உடலில் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படும்.
நீங்கள் மருந்துகள் எடுத்துக் கொள்ளும்போது வெறும் வயிற்றில் பால் குடிக்க வேண்டாம். மீறினால் பாலில் இருக்கும் கால்சியம் மருந்துகளின் செயல் திறனை குறைக்கும்