ஒருவர் மனம் மற்றும் உடல்ரீதியாக பாதிக்கப்பட காரணமான மனநோய் தான் மனச்சோர்வு.
அதிகம் சிந்திப்பது அல்லது வாழ்வில் உளரீதியாக தொந்தரவான சம்பவத்தை அனுபவிக்க நேரும்போது மனச்சோர்வுக்கு ஆளாவோம்.
தனிமை, அதிகம் யோசிப்பது, சாப்பிடாமல் இருப்பது, பதட்டம், தூக்கமின்மை உள்ளிட்டவை மன அழுத்தத்தின் சில அறிகுறிகள்.
சமூக விலகல், சுய சந்தேகம், குறைவான சுயமரியாதை, தீர்க்கப்படாத உணர்ச்சிப் பிரச்சனை போன்றவை தனிமை உணர்வை ஏற்படுத்தும்.
தன்னை ஒருவரும் புரிந்து கொள்ளவில்லை என நினைக்கும் ஒருவர் கூட்டத்தில் கூட தனிமையாக உணரத் தொடங்குகிறார்.
தனிமை இயல்பானது என்றாலும் நீண்ட காலமாக அப்படி நீடித்தால் அதை கவனித்து சரிசெய்ய வேண்டும்.
சமூக தொடர்பு, உணர்வுகளின் வெளிப்பாடு போன்றவை மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முக்கியமான விஷயங்களாகும்.
கூட்டத்தில் தனிமையாக உணர்ந்தால் அந்த உணர்வுகளை அங்கீகரியுங்கள். நம்பிக்கையான புரிதல் உள்ள நபரிடம் பேசுங்கள்.
மனதில் உள்ளவற்றை பகிர்தல் மனதை இலகுவாக்கும். நேர்மறையான விஷயங்களை பின்பற்றுங்கள்.
விளையாட்டு, யோகா, இசை, உடற்பயிறி அல்லது புதிய திறமை கற்பது மனநிலையை மேம்படுத்தும்.
நல்ல தூக்கம், ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி போன்றவை அன்றாட பழக்கங்களாக இருக்கட்டும்
கழுத்தில் சுருக்கங்கள் வராமல் இருக்க இதை பண்ணா போதும்
தர்பூசணி சாப்பிட்ட உடனே இந்த உணவுகளை சாப்பிடாதீங்க!
பால் கெட்டுப்போவதை தடுக்க சிம்பிள் டிப்ஸ்!
குழந்தைகளின் மன ஆரோக்கியத்தை பாதிக்கும் பெற்றோரின் 6 தவறுகள்..!