life-style

உலக சர்வதேச புலிகள் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா?

Image credits: Pixabay

உலக சர்வதேச புலிகள் தினம் ஏன்?

இன்று உலக சர்வதேச புலிகள் தினம். சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிப்பதில் புலிகளின் முக்கியத்துவத்தை இந்த கொண்டாட்டம் அடிக்கோடிட்டு காட்டுகிறது.

Image credits: Pixabay

சர்வதேச புலிகள் தினம்

சர்வதேச புலிகள் தினம், ரஷ்யாவில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் தான் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 2010, ஜூலை 29ஆம் அன்று முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

Image credits: Pixabay

இதன் நோக்கம்

புலிகளின் பாதுகாப்பு குறித்து மகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவற்றின் வாழ்விடத்தை பாதுகாப்பது மற்றும் விரிவுப்படுத்துவதும் ஆகும்.

Image credits: Pixabay

புலிகள் காப்பகம்

இந்திய அரசு 1973 ஆம் ஆண்டு புலிகள் திட்டத்தை தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ் பல புலிகள் காப்பகங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்தியாவில் மொத்தம் 54 புலிகள் காப்பகங்கள் உள்ளன.

Image credits: Pixabay

புலிகள்

புலி இந்தியாவின் தேசிய விலங்கு மட்டுமல்ல, உலகில் உள்ள பெரும்பாலான புலிகள் இந்தியாவில் மட்டுமே காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Image credits: Pixabay

2024 சர்வதேச புலிகள் தினம் கருப்பொருள்

இந்த 2024 சர்வதேச புலிகள் தினத்தின் கருப்பொருள் " அவற்றின் எதிர்காலம் நம் கையில்" ஆகும்.

Image credits: Pixabay
Find Next One