life-style

இந்த 7 உணவுகளை தொட்டு கூட பாக்காதீங்க..சிறுநீரகத்தை மோசமாக பாதிக்கும்!

Image credits: Getty

சிறுநீரகம்

சிறுநீரகம் உடலின் மிக முக்கியமான உறுப்பு. எனவே, சிறுநீரகத்தை பாதிக்கும் மோசமான உணவுகள் என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

Image credits: pexels

குளிர் பானங்கள்

குளிர்பானங்களில் பிரக்டோஸ் பாஸ்போரிக் உள்ளது. இவை சிறுநீரக கற்களை ஏற்படுத்தும். அதிகமாக குடித்தால் சிறுநீரக செயலிழப்புக்கு வழி வகுக்கும்.

Image credits: Getty

சிவப்பு இறைச்சிகள்

மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி போன்றவை ஆரோக்கியத்திற்கு நல்லதா என்றாலும், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் சிறுநீரகத்தை சேதப்படுத்தும்.

Image credits: Getty

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பதப்படுத்தப்பட்ட, பேக் செய்யப்பட்ட உணவுகள், இறைச்சிகள், தின்பண்டங்கள் போன்றவை சிறுநீரகத்தை சேதப்படுத்தும். இவற்றில் சோடியம் அதிகம் இருப்பதால் சிறுநீரக பாதிப்பு ஏற்படுத்தும்.

Image credits: social media

ஊறுகாய்

ஊறுகாயில் எண்ணெய், உப்பு அதிகம் சேர்ப்பதால், இதில் சோடியம் அதிகமாக இருக்கும். இது உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

Image credits: Getty

காஃபின்

அதிகப்படியான காஃபின் எடுத்துக் கொள்வது உடலில் நீரிழிப்புக்கு வழிவகுக்கும். இது சிறுநீரக செயல்பாட்டையும் பாதிக்கும். எனவே அதிகமாக காபி, டீ குடிப்பதை தவிர்க்கவும்.

Image credits: Getty

செயற்கை இனிப்புகள்

இவை காலப்போக்கில் சிறுநீரக செயல்பாட்டில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். பேக்கிங் சோடா, சர்க்கரை இல்லாத இனிப்புகள், குறைந்த கலோரி தின்பண்டங்கள் இதில் அடங்கும்.

Image credits: Getty

பொட்டாசியம் அதிகம்

அதிகளவு சிறுநீர் பிரச்சினை உள்ளவர்களுக்கு பொட்டாசியம் தீங்கு விளைவிக்கும். எனவே, வாழைப்பழம், ஆரஞ்சு, உருளைக்கிழங்கு ஆகியவற்றை அளவோடு சாப்பிடுங்கள்.

 

Image credits: Getty

சிறுநீரகம் ஆரோக்கியத்திற்கு

சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க பச்சை காய்கறிகள், முழு தானியங்கள், முட்டையின் வெள்ளை கரு மற்றும் நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம்.

Image credits: Image: Freepik
Find Next One