life-style
சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிக்க கூட. இதனால் சரியான அளவில் உணவை சாப்பிட முடியாது. அதுபோல தான் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்க கூடாது. 30 நிமிடங்களுக்கு பிறகு குடிக்கலாம்.
சிலருக்கு சாப்பிட்ட உடனே தூங்கும் பழக்கம் இருக்கும். இது செரிமானத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும். எனவே, சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து தூங்கலாம்.
உங்களுக்கு சாப்பிட்ட பிறகு குளிக்கும் பழக்கம் இருந்தால் உடனே நிறுத்துங்கள். அது தவறு. குறைந்தது 2 மணி நேரம் கழித்து தான் குளிக்க வேண்டும்.
சாப்பிட்ட உடனேயே சிகரெட் பிடித்தால் செரிமானத்தில் குறுக்கிட்டு, பல்வேறு வயிறு மற்றும் குடல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். மேலும் அது 10 சிகரெட் குடிப்பதற்கு சமம்.
உணவு சாப்பிட்ட உடனே டீ காபி குடித்தால், அதில் உள்ள சில அமிலங்கள் உணவு புரதங்களை உறிஞ்சுவதில் தலையிடும்.
சாப்பிட்ட உடனே மது அருந்து பழக்கம் இருந்தால் உடனே நிறுத்துங்கள். அது உடல் ஆரோக்கியத்தில் பாதகமான பாதிப்பை ஏற்படுத்தும் மற்றும் பல உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தும்.
சாப்பிட்ட உடனே ஜாகிங் சென்றால் உடலின் ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கும். மேலும், இரத்த ஓட்டம் குறையும்.
சாப்பிட்ட பிறகு உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இருந்தால் உடனே நிறுத்துங்கள். சாப்பிட்ட பின் குறைந்தது 2 முதல் 3 மணி நேரம் கழித்து தான் செய்ய வேண்டும்.