குழந்தைகள் ஸ்கூலுக்கு போக, சாப்பிட, வீட்டுப்பாடங்கள் செய்ய அடம்பிடிப்பார்கள். அந்த சமயத்தில் கோபப்படாமல் அவர்களை அன்பாக அணுகவும்.
ஸ்கூலுக்கு போகும் குழந்தைக்கு பள்ளியில் ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா? நன்றாக படிக்கிறார்களா? என்று விசாரித்து அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளவும்.
ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளிடம் வெளிப்படையாக பேச வேண்டும். இதனால் அவர்களது இலக்குகள் அவர்களுக்கு புரியும்.
குழந்தைகள் நல்ல மார்க் எடுத்தாலோ, ஒழுக்கமாக நடந்து கொண்டாலோ, கீழ்படிந்தாலோ அவ்வப்போது வெகுமதி கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்துங்கள்.
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளிடம் நண்பர்களாக பழக வேண்டும். இதற்கு அவர்களுடன் சேர்ந்து விளையாடலாம், படம் வரையலாம் போன்றவை ஆகும்.
குழந்தைகளுடன் பெற்றோர்கள் சிறிது நேரம் செலவழிப்பதன் மூலம் அவர்கள் எதில் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க தண்டனை சரியான வழி அல்ல. இதனால் அவர்களது பிடிவாதம், கோபம் இன்னும் தான் அதிகரிக்கும்.
பெற்றோர்கள் குழந்தைகள் செய்யும் சிறப்பான செயல்பாட்டினை பாராட்டினால் அவர்களது தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
கருப்பு திராட்சையில் கொட்டி கிடக்குது நன்மைகள் பல..!!
கடைசி துண்டு சோப்பை வைச்சு இவ்ளோ பண்ணலாமா?
உங்க செல்ல நாய்க்கு மழைக்கால நோய் தாக்காமல் தடுக்க டிப்ஸ்!!
காலை காபிக்கு பதில் புதினா நீர் குடித்தால் 8 நன்மைகள்!!