மழைக்காலத்தில் நாய்க்குட்டியின் பாதங்கள் ஈரமாக இருந்தால் பூஞ்சை தொற்று, வெடிப்பு வர வாய்ப்பு உள்ளன. எனவே அவ்வப்போது துணியால் துடைக்கவும்.
மழைக்காலத்தில் நாய்கள் அடிக்கடி ஈரமாகயிருந்தால் அதன் வயிற்றில், காலில், காதில் பூஞ்சையை தடுக்கும் பவுடரை போடுங்கள். இதனால் சரும தொற்றுகள் வராது.
மழைநீர் பாக்டீரியாக்களை பரப்பும். எனவே அதிகமாக மழை பெய்யும் போது நாயை வாக்கிங் கூட்டிட்டு போக வேண்டாம்.
நாய்களின் காதுகளில் எளிதாக ஈரம் சேரும் என்பதால், கால்நடை மருத்துவர் பரிந்துரைத்த இயர் க்ளீனரை வைத்து காதுகளை சுத்தம் செய்யுங்கள்.
நாய்க்குட்டியின் முடி நனைந்தால் blow ட்ரையர் பயன்படுத்துங்கள். அதுவும் லோ செட்டிங்கில். இது ஒட்டுண்ணி பூஞ்சை, தொற்றிடமிருந்து நாய்களை காப்பாற்றும்.
மழை காலத்தில் உங்க நாய்க்குட்டிக்கு சூடான, அதுவும் எளிதில் ஜீரணிக்க கூடிய உணவுகளை மட்டுமே கொடுங்க.
குறுகிய வெளிப்புற பயணங்களின் போது உங்க நாய்க்குட்டிக்கு ரெயின் கோட் வாட்டர் ப்ரூப் காலணிகள் பயன்படுத்தலாம்.
உங்கள் நாய்க்குட்டி தூங்குமிடம், விளையாடும் பொருட்கள், சாப்பிடும் தட்டு போன்ற அனைத்தும் சுத்தமாக இருக்க வேண்டும். முக்கியமாக வீட்டிற்குள் தண்ணீரை உறிஞ்சக்கூடிய மேட் போடுங்கள்.
மழையால் வாக்கிங் கூட்டிட்டு போக முடியவில்லை என்றால் வீட்டிற்குள்ளேயே சின்ன சின்ன பயிற்சி கொடுங்கள். இதனால் சோர்வாக உணராது.