உங்கள் நினைவாற்றல், மூளை செயல்பாட்டை மேம்படுத்த சிறிய கணக்கீடுகளை கூட கால்குலேட்டரை பயன்படுத்துவதற்கு பதிலாக உங்களது மூளையை பயன்படுத்துங்கள்.
சில செயல்களுக்கு உங்களது வழக்கமான கையை பயன்படுத்தாமல் மற்றொரு கையை பயன்படுத்துங்கள். இதனால் மூளை சுறுசுறுப்பாக மாறும்.
தினசரி நடைப்பயணத்தின் போது ஒரே வழியில் நடக்காமல் வேறு வழியில் நடக்கவும். இது உங்கள் மூளையை விழிப்புடன் வைத்திருக்க உதவும்.
உங்களுக்கு பிடித்த எழுத்தாளர் புத்தகத்தை படியுங்கள் மற்றும் நினைவாற்றல், மூளையின் செயல்திறனை மேம்படுத்த இசைகளை கேட்கலாம்.
தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் வாக்கிங், ஜாக்கிங், சைக்கிள் ஓட்டுதல் போன்ற உடற்பயிற்சி செய்யுங்கள்.
தினமும் டைரி எழுதுவதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது உங்களது நினைவாற்றலை மேம்படுத்தும்.
ஒரு நாளைக்கு சுமார் 10 நிமிடங்கள் ஆவது மனநிறைவு பயிற்சி செய்தால் மன அழுத்தம் குறையும். மனம் தெளிவாகும்.
ஏதாவது புதியதாக கற்றுக் கொள்ளுங்கள். அது வார்த்தையாக கல்வி வீடியோவாக கூட இருக்கலாம். இது மூளைக்கு நல்ல பயிற்சியாகும்
புகைப்பிடிப்பதை விட்டால் எடை அதிகரிக்குமா? காரணமும், தீர்வும்!!
இரவில் 'இத' சாப்பிடுங்க.. எடை கிடுகிடுனு குறையும்; நல்ல தூக்கம் வரும்
பெற்றோரே! குழந்தைகளை மனதளவில் வலிமையாக மாற்ற இந்த 6 விஷயங்கள் பண்ணுங்க
Friendship Day : உங்க ப்ரெண்டுக்கு இந்த கிப்ட் கொடுங்க; ஹப்பி ஆவாங்க