புகைப்பிடித்தால் நுரையீரல், இதயம் பலவீனமாகும். பற்கள் சேதமாகும். இளமையிலேயே முதுமையாக தோன்றுவீர்கள். சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். ஆக ஒட்டு மொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படும்.
புகை பிடித்தல் பசியை குறைக்கும். அதை நிறுத்தினால் பசி அதிகரிக்கும். அதிக கலோரி உணவுகள் சாப்பிட தூண்டும். இதனால் எடை அதிகரிக்கும்.
தினமும் உடற்பயிற்சி செய்தால் கலோரிகள் எரிக்கப்படும். மேலும் ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் புகைப்பிடிக்கும் ஏக்கத்தை தடுக்கும்.
அதிக கலோரிகள் சாப்பிடுவதை தவிர்க்க பழங்கள், காய்கறிகள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள உணவுகளை அதிகமாக சாப்பிடுங்கள்.
தூக்கமின்மையும் எடையை அதிகரிக்கும். எனவே தினமும் நன்றாக தூங்குங்கள்.
புகை பிடிப்பதை நிறுத்திய பிறகு ஆரோக்கியமான மற்றும் சத்தான சிற்றுண்டி சாப்பிடுங்கள்.
தினமும் நிறைய தண்ணீர் குடியுங்கள். நீர்ச்சத்து உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை விரைவுப்படுத்த உதவும்.
மதுபானங்களில் கலோரிகள் அதிகமாக உள்ளதால் அது எடை மேலாண்மை மற்றும் சிகரெட் பசியை நிர்வகிப்பதை கடினமாக்கும்.
இரவில் 'இத' சாப்பிடுங்க.. எடை கிடுகிடுனு குறையும்; நல்ல தூக்கம் வரும்
பெற்றோரே! குழந்தைகளை மனதளவில் வலிமையாக மாற்ற இந்த 6 விஷயங்கள் பண்ணுங்க
Friendship Day : உங்க ப்ரெண்டுக்கு இந்த கிப்ட் கொடுங்க; ஹப்பி ஆவாங்க
பெண்களே! காலை 9 மணிக்கு முன்னால இத மட்டும் மறந்தும் செய்யாதீங்க!!