காலை அதிக நேரம் தூங்கினால் நாள் முழுவதும் உங்களை சோர்வாக உணர்வைக்கும். எனவே காலையில் அதிகநேரம் தூங்காதீர்கள்.
காலை உணவை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. ஏனெனில் காலை உணவு தான் ரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவும், உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும்.
காலை எழுந்தவுடன் இன்ஸ்டாகிராம், செய்திகள் மொபைல் போனில் பார்ப்பதுஉங்களது மனதை உடனே குழப்பமடைய செய்யும். இதனால் நாளின் அமைதி பாதிக்கப்படும்.
காலையில் சிப்ஸ், கூல் ட்ரிங்க்ஸ், கேக் சர்க்கரை நிறைந்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற ஆரோக்கியமற்ற உணவை சாப்பிடுவது நல்லதல்ல.
காலையில் வெறும் வயிற்றில் டீ அல்லது காபி குடிக்க கூடாது. அதில் இருக்கும் காஃபி உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
காலையில் தினமும் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பதை பழக்கமாக்குங்கள். இல்லையெனில் நீச்சத்து இழப்பு காரணமாக நினைவாற்றல் செயல்பாடு பாதிக்கப்படும்.
காலையில் ஏதாவது ஒரு சிறிய உடற்பயிற்சி செய்வதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இதனால் ரத்த ஓட்டம் மேம்படும், உடலின் ஆற்றல் அளவு அதிகரிக்கும்.
உங்களது கவனத்தை ஒருமுகப்படுத்த மன அழுத்தத்தை குறைக்க ஆழ்ந்த சுவாசம் உள்ளிட்ட மன அமைதிக்கான பயிற்சி செய்வதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
காலையில் தாமதமாக எழுந்து அவசர அவசரமாக வேலைக்கு செல்வது மன அழுத்தம், பதட்டத்தை அதிகரிக்கும். எனவே சற்று முன்னதாகவே எழ முயற்சி செய்யுங்கள்.