Tamil

ஆடையில் பட்ட மாம்பழக் கறையை நீக்கும் சூப்பர் டிப்ஸ்!!

Tamil

குளிர்ந்த நீர்

ஆடையில் மாம்பழ கறை பட்டவுடனேயே குளிர்ந்த நீரில் ஊற வைக்க வேண்டும். இதனால் கறை பரவுவது தடுக்கப்படும்.

Image credits: iSTOCK
Tamil

பேக்கிங் சோடா அல்லது வினிகர்

பேக்கிங் சோடா அல்லது வினிகரை ஆடையில் படிந்த மாம்பழ கறை மீது தடவி ஒரு மணி நேரம் கழித்து எப்போதும் போல துவைக்க வேண்டும். இவை சிறந்த கறை நீக்கியாகும்.

Image credits: Social Media
Tamil

சோப்பு

வாஷிங் சோப்பை ஆடையில் படிந்த மாம்பழ கறை மீது தடவி ஒரு மணி நேரம் கழித்து துவைத்தால் கறை நீங்கிவிடும்.

Image credits: Social Media
Tamil

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாற்றை ஆடையில் பட்ட மாம்பழ கறை மீது தடவி சிறிது நேரம் அப்படியே வைத்து விட்டு பிறகு சோப்பு போட்டு துவைக்கலாம்.

Image credits: Getty
Tamil

கைகளை பயன்படுத்தாதே!

ஆடையில் படிந்திருக்கும் மாம்பழத்தை ஒருபோதும் கைகளால் நீக்க வேண்டாம். இது கறையை மேலும் அதிகப்படுத்தும். ஒரு துணி அல்லது காகிதத் துண்டால் நீக்க வேண்டும்.

Image credits: Gemini
Tamil

குறிப்பு

ஆடையில் பட்ட மாம்பழ கறையை நீக்க ஒருபோதும் வெதுவெதுப்பான நீரை பயன்படுத்த வேண்டாம். அது கறையை மேலும் ஆழமாக ஊடுருவச் செய்யும்.

Image credits: Metaai

வியர்வையால் அரிப்பு, புண்களா? இதோ உடனடி நிவாரணம்

சமையல் பாத்திரத்தில் துர்நாற்றம் நீங்க 7 வழிகள்!

குழந்தைகளை ஏன் மற்றவர்களுடன் ஒப்பிடக் கூடாது?

கிச்சனில் இந்த தவறுகளை மட்டும் பண்ணாதீங்க; ஆபத்து!!