பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து எலுமிச்சை தோலை அதில் சேர்க்கவும். துர்நாற்றம் அதிகமாக இருந்தால் 15-20 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
துர்நாற்றம் அடிக்கும் பாத்திரத்தில் சிறிதளவு இலவங்கப்பட்டை போட்டு நன்கு கொதிக்க விடவும் பிறகு எப்போதும் போல சுத்தம் செய்யவும்.
துர்நாற்றம் அடிக்கும் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சிறிதளவு புதினா இலைகளை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். பிறகு வழக்கம் போல கழுவ வேண்டும்.
வெதுவெதுப்பான நீரை துர்நாற்றம் அடிக்கும் பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் சிறிதளவு காபித்துளை சேர்த்து நன்றாக சுத்தம் செய்தால், நாற்றம் அடிக்காது.
துர்நாற்றம் வீசும் பாத்திரத்தை தண்ணீர் மற்றும் வினிகர் கலந்த கரைசலில் நீண்ட நேரம் ஊற வைத்து பிறகு சுத்தம் செய்தால் பிடிவாதமான கறை மற்றும் துர்நாற்றம் நீங்கும்.
துர்நாற்றம் வீசும் பாத்திரத்தில் சமையல் சோடாவை தூவி அதன் மேல் சூடான நீரை ஊற்றவும். 15 நிமிடங்கள் கழித்து எப்போதும் போல பாத்திரத்தை கழுவும்.
எலுமிச்சை சாற்றை துர்நாற்றம் அடிக்கும் பாத்திரத்தில் தேய்த்து சில நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு வழக்கம் போல கழுவ வேண்டும்.