இதன் புளிப்பு சுவை உப்பை குறைக்க உதவும். எனவே, குழம்பில் உப்பு, காரம் அதிகமானால் ஒரு சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்க்கவும். இது சுவையை சமன் செய்யும்.
குழம்பில் உப்பு அதிகமானால் சிறிதளவு தயிர் சேர்த்தால் உப்பை சமன் செய்துவிடும். குழம்பும் சுவையாகவும் தடிமனாகவும் இருக்கும்.
நெய் உப்பு காரத்தை குறைக்க உதவுகிறது. எனவே குழம்பில் உப்பு காரம் அதிகமானால் ஒரு ஸ்பூன் நெய் சேர்க்கவும். இது சுவை மற்றும் மணத்தை தரும்.
உருளைக்கிழங்கை சின்ன துண்டுகளாக வெட்டி குழம்பில் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கழித்து அகற்றிவிடுங்கள். அது உப்பை உறிஞ்சி விடும்.
உப்பு அதிகமான குழம்பில் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்தால் உப்பு சுவை குறையும்.
குழம்பில் உப்பு அதிகமானால் முந்திரி விழுதை அதில் சேர்த்தால் உப்பு சுவையை சமன் செய்யும், குழம்பும் கெட்டியாக இருக்கும்.
குழம்பில் உப்பு அதிகமானால் தக்காளி அல்லது வெங்காய விழுது சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.
குழம்பில் உப்பு அதிகமானால் கடலை மாவை சின்ன உருண்டைகளாக உருட்டி குழம்பில் சேர்த்தால், அது உப்பை உறிஞ்சி விடும்.
துளசி இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிட இப்படி ஒரு காரணமா?
மாதவிடாய் வர போதா? இந்த உணவுகளை சாப்பிடுங்க; வயிறு உப்புசம் ஆகாது
மீன் பிரியரா? மறந்தும் மீனுடன் இந்த '8' உணவுகளை சாப்பிடாதீங்க!
பீரியட்ஸ் டைம்ல எந்த மாதிரியான டிரஸ் போடணும் தெரியுமா?