இட்லி, தோசை மாவு சீக்கிரமாக புளிப்பதற்கு முக்கிய காரணம் ஸ்டார்ச், தண்ணீர் உள்ளிட்டவையே. இவைதான் பாக்டீரியாவின் வளர்ச்சிக்கான சிறந்த கலவையாகும்.
இந்த பாக்டீரியாக்கள் தான் மாவில் இருக்கும் சர்க்கரையை உடைத்து கார்பன் டை ஆக்சைடு, ஆல்கஹால் ஆகியவற்றை உற்பத்தி செய்து மாவு புளிக்க முக்கிய காரணமாகிறது.
வெப்பமான சூழலும் பாக்டீரியா வளர்ச்சிக்கு உகந்ததாகும். எனவே மாவைவை அங்கு வைத்தால் விரைவில் புளித்து விடும்.
மாவை ஃப்ரிட்ஜில் வைத்து சேமிப்பது சிறந்தது. இங்கு வெப்பநிலை மற்றும் பாக்டீரியா வளர்ச்சி குறைவு. இதனால் நீண்ட நாட்கள் மாவு புளிக்காமல் இருக்கும்.
மாவு வைக்கும் பாத்திரம் சுத்தமாக இருப்பது ரொம்பவே முக்கியம். அசுத்தமாக இருந்தால் மாவு விரைவில் புளித்து விடும்.
பழைய மாவுடன் புதிய மாவை ஒருபோதும் கலக்கக்கூடாது. இல்லையெனில் மாவு விரைவில் புளித்துவிடும்.
மாவை அடிக்கடி கிளறினால் அதினுள் காற்று அதிகரித்து பாக்டீரியா வளர்ச்சி ஏற்படும். மேலும் மாவை அரைத்த பிறகு அதை கலக்காமல் அப்படியே வைக்கவும்.
வீட்டுல இந்த பொருள்கள் இருக்கா? இவை ஞாபக சக்தியை உண்டாக்கும்
அக்மார்க் சுத்தமான நெய் 'இப்படி' தான் இருக்கும்; சிம்பிள் டிப்ஸ்!
கறிவேப்பிலை பிரஷ்ஷாக இருக்க சூப்பரான டிப்ஸ்!!
நல்ல மனுசங்களுக்கு சாணக்கியர் சொல்ற இந்த குணங்கள் இருக்கும்