மாதுளை சுவையான மற்றும் ஆரோக்கியமான பழம். எனவே, இனிப்பான மாதுளையை வெட்டாமல் சுலபமாக கண்டுபிடிப்பது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.
கனமான மாதுளையில் சாறு மற்றும் இனிப்பும் அதிகமாக இருக்கும். எனவே நீங்கள் மாதுளை வாங்கும் போது கனமானதை வாங்கவும்.
இனிப்பான மாதுளையின் வடிவம் வட்டமாகவும், மென்மையாகவும் இருக்கும். மேலும் மாதுளையின் தோலில் எந்தவித கறை அல்லது விரிசல் இருக்கக் கூடாது.
இனிப்பான மாதுளையின் நிறம் அடர் சிவப்பாக இருக்கும். மாதுளைத் தோல் பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கக் கூடாது.
மாதுளை லேசான இனிமையான மணம் கொண்டது. புளிப்பு அல்லது அழுகிய வாசனை கொண்ட மாதுளையை வாங்க கூடாது.
மாதுளையின் மேல் பகுதி நன்றாக திறந்து இருந்தால் அது பழுத்ததாகவும், இனிப்பாகவும் இருக்கும். அதுவே சிறியதாக இருந்தால் குறைவான இனிப்பு சுவை கொண்டது.
குழந்தைகள் வெற்றி பெற சாணக்கியரின் 10 வாழ்க்கை பாடங்கள்
கிச்சனில் ஈக்கள் மொய்க்குதா? ஈஸியா விரட்ட 6 டிப்ஸ்
குளிர்ச்சியான 5 வகையான சர்பத் ரெசிபிகள்!
அடிபிடித்த பாத்திரத்தை சுத்தம் செய்ய 6 விதமான வழிகள்